மாணவர்களுக்கு சப்ளை... உல்லாச வாழ்க்கை; 3,750 போதை மாத்திரைகளுடன் 4 இளைஞர்கள் கைது

மாணவர்களுக்கு சப்ளை... உல்லாச வாழ்க்கை; 3,750 போதை மாத்திரைகளுடன் 4 இளைஞர்கள் கைது

சென்னை அருகே பூந்தமல்லியில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு விற்பனை செய்ய கடத்தி வரப்பட்ட 3,750 போதை மாத்திரைகளை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.

பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு போதை மாத்திரைகளை விற்பனை செய்யப்படுவதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து பூந்தமல்லி பேருந்து நிலையம் அருகே போலீஸார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த நபர்களை மடக்கி பிடித்தனர். அவர்கள் பேக்கை சோதனை செய்த போது அதில் போதை மாத்திரைகள் ஒரு அட்டைக்கு 30 வீதம் மொத்தம் 124 அட்டைகள் இருந்தது.

இதுகுறித்து விசாரித்த போது உல்லாசமாக வாழ்வதற்கு போதை மாத்திரை விற்பனை செய்ய, ஹைதராபாத்தில் இருந்து வாங்கி வந்து விற்பனை செய்து வந்ததாக கூறினர். விசாரணையில் அவர்கள் முகப்பேரை சேர்ந்த ஆகாஷ் (22), மாறன் (23), சீனுராஜ் (19), ஆனந்த் (19) என தெரியவந்தது.

அவர்களிடமிருந்து 3,720 போதை மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டது. பின்னர் காவல்துறையினர் 4 பேரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in