இலங்கை கிரிக்கெட் வாரியத்திற்கு மீண்டும் சிக்கல்: நீதிமன்ற தீர்ப்பால் குழப்பம்!

இலங்கை கிரிக்கெட் வாரிய அலுவலகத்திலிருந்து வெளியேறும் அர்ஜுன ரணதுங்கா
இலங்கை கிரிக்கெட் வாரிய அலுவலகத்திலிருந்து வெளியேறும் அர்ஜுன ரணதுங்கா

இலங்கை கிரிக்கெட் வாரியம் கலைக்கப்பட்டதற்கு அந்நாட்டு உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளதால், மீண்டும் குழப்பம் ஏற்பட்டுள்ளது.

இலங்கை கிரிக்கெட் அணி தொடர்ந்து சர்வதேச போட்டிகளில் தோல்விகளைச் சந்தித்து வருகிறது. ஆசிய கோப்பை மற்றும் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டிகளில் அந்த அணியின் தொடர் தோல்விகளால் அந்நாட்டு ரசிகர்களிடையே பெரும் அதிருப்தி நிலவி வருகிறது.

இலங்கை கிரிக்கெட் வாரிய தலைவர் ஷம்மி சில்வா உட்பட நிர்வாகிகள் மீது ஏராளமான குற்றச்சாட்டுகளை அந்நாட்டு அரசியல் கட்சியினரும், ரசிகர்களும் முன்வைத்து வருகின்றனர்.

இலங்கை அணி வீரர்கள்
இலங்கை அணி வீரர்கள்

இதையடுத்து அதிரடியாக இலங்கை கிரிக்கெட் வாரியத்தை அடியோடு கலைப்பதாக அந்நாட்டு விளையாட்டு துறை அமைச்சர் ரணசிங்கே நேற்று அறிவித்திருந்தார். மேலும் முன்னாள் இலங்கை கிரிக்கெட் அணியின் தலைவர் அர்ஜுன ரணதுங்கா தலைமையில் இடைக்கால குழு அமைக்கும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது.

இதனிடையே அரசின் இந்த உத்தரவை எதிர்த்து ஷம்மி சில்வா சார்பில் அந்நாட்டு உச்ச நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம் இடைக்கால கமிட்டி தொடர்பான அரசாணைக்கு 14 நாட்கள் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.

ஐசிசி கூட்டத்தில் பங்கேற்க போவது யார்?
ஐசிசி கூட்டத்தில் பங்கேற்க போவது யார்?

இதன் காரணமாக இன்று இலங்கை கிரிக்கெட் வாரிய அலுவலகத்திற்கு வருகை தந்திருந்த ரணதுங்கா, சில நிமிடங்களுக்குப் பிறகு அங்கிருந்து கிளம்பிச் சென்றார். ஏற்கெனவே தொடர் தோல்விகளால் துவண்டுள்ள இலங்கை அணிக்கு, கிரிக்கெட் வாரியமும் தொடர் பிரச்சினைகளைச் சந்தித்து வருவதால், பெரும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

இதனிடைய 2 வார காலத்திற்குள், ஐசிசியின் ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ள நிலையில், அதில் இலங்கை கிரிக்கெட் வாரியம் சார்பில் யார் பங்கேற்பார்கள் என்கிற கேள்வியும் எழுந்துள்ளது.

இதையும் வாசிக்கலாமே...

HBD Kamalhassan: கமல்ஹாசன் வேண்டுகோளை நிராகரித்த ’சூப்பர் ஸ்டார்’!

இன்று 19 மாவட்டங்களில் கனமழை... வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

சத்தீஸ்கர் வாக்குப்பதிவில் பரபரப்பு... குண்டுவெடிப்பில்  பாதுகாப்பு படை வீரர் காயம்!

திமுகவுடன் கூட்டணியா? கமல் சொன்ன 'நச்' பதில்!

வீட்டை காலி செய்ய மிரட்டுகிறார்! நடிகர் பிரபுதேவா சகோதரர் மீது பரபரப்பு புகார்

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in