தோல்வியை தழுவிய கால்பந்து அணி! போர் பதற்றத்திற்கிடையே இஸ்ரேலுக்கு சோக செய்தி

யூரோ கோப்பை தகுதி சுற்றுப் போட்டிகளில் இஸ்ரேல் கால்பந்து அணி தோல்வி
யூரோ கோப்பை தகுதி சுற்றுப் போட்டிகளில் இஸ்ரேல் கால்பந்து அணி தோல்வி

யூரோ கோப்பை கால்பந்து தொடருக்கு தகுதி பெறுவதற்கான கால்பந்து தொடரில், இஸ்ரேல் அணி தோல்வி அடைந்து வெளியேறியுள்ளது.

உலகின் தலைசிறந்த அணிகள் பங்கேற்கும் யூரோ கோப்பை கால்பந்து போட்டிகள் 2024 ம் ஆண்டு நடைபெற உள்ளது. ஜூன் மாதம் 14ம் தேதி துவங்கி, ஜூலை மாதம் 14ம் தேதி வரை இந்த போட்டிகள் ஜெர்மனியில் நடைபெற உள்ளது.

இதையொட்டி ஏற்கெனவே ஜெர்மனி உட்பட 10 நாடுகள் போட்டியில் பங்கேற்க தகுதி பெற்றுவிட்டன. உக்ரைன் மீதான போர் காரணமாக ரஷ்யா இந்த போட்டியில் விளையாட தடை விதிக்கப்பட்டுள்ளது.

கொசாவாவுடனான போட்டியில் 1-0 என்ற கணக்கில் இஸ்ரேல் தோல்வி
கொசாவாவுடனான போட்டியில் 1-0 என்ற கணக்கில் இஸ்ரேல் தோல்வி

இதையடுத்து போட்டியில் பங்கேற்கும் மற்ற இரு அணிகளை தேர்வு செய்வதற்கான போட்டிகள் பல்வேறு இடங்களில் நடைபெற்று வருகிறது. கொசாவா நாட்டில் நடைபெற்று வரும் தகுதி சுற்றுப் போட்டிகளில் ரோமானியா, சுவிட்சர்லாந்து, இஸ்ரேல், கொசாவா, பெலாரஸ் மற்றும் அண்டோரா அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன.

ஏற்கெனவே இந்த போட்டிகளில் ரோமானியா மற்றும் சுவிட்சர்லாந்து புள்ளி பட்டியலில் முதல் இரண்டு இடங்களை பிடித்துள்ள நிலையில், இந்த அணிகள் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்று விட்டன. கொசாவாவுடன் நடைபெறும் போட்டியில் வெற்றி பெற்றால் இஸ்ரேல் கால்பந்து அணிக்கு தகுதி பெறுவதற்கான வாய்ப்பு இருந்தது.

புள்ளிப்பட்டியலில் 3வது இடத்தை மட்டுமே இஸ்ரேல் பிடிக்க முடிந்தது
புள்ளிப்பட்டியலில் 3வது இடத்தை மட்டுமே இஸ்ரேல் பிடிக்க முடிந்தது

நேற்று இந்தப் போட்டி நடைபெற்ற போது துவக்கம் முதலே இரு அணிகளும் கோல் அடிக்க முடியாமல் திணறினர். குறிப்பாக இரு அணியிலும் கோல்கீப்பர்கள் மிகச் சிறப்பாக விளையாடி வீரர்கள் கோல் அடிக்க முடியாமல் தடுத்துக் கொண்டே இருந்தனர்.

இருப்பினும் கொசாவாவின் மில்லட் ரஷிகா 41வது நிமிடத்தில் ஒரு கோல் அடித்து அசத்தினார். இதற்கு பதில் கோல் திருப்ப முடியாமல் இறுதிவரை இஸ்ரேல் திணறிய நிலையில், ஆட்ட நேர முடிவில் 1-0 என்ற கணக்கில் கொசாவா வெற்றி பெற்றது. இதை தொடர்ந்து இந்த தொடரில் இருந்து இஸ்ரேல் வெளியேறியுள்ளது.

நாடு போரை சந்தித்து வரும் நிலையில், மக்களுக்கு மகிழ்ச்சியை தரக்கூடிய வகையில் வெற்றி பெற முடியாதது தங்களுக்கு பெரும் வருத்தத்தை அளிப்பதாக, இஸ்ரேல் கால்பந்து அணியின் பயிற்சியாளர் ஆலன் ஹசன் வருத்தம் தெரிவித்துள்ளார்.

இதையும் வாசிக்கலாமே...

இன்று உலக கருணை தினம்... வெறுப்பு கரையட்டும்; கருணை பொங்கட்டும்!

ஈரோட்டில் அதிர்ச்சி! அதிகாலையில் கோர விபத்து... 3 பேர் உயிரிழப்பு!

பெரும் சோகம்... பட்டாசு வெடித்து சிதறியதில் 4 வயது சிறுமி உயிரிழிப்பு!

திருச்செந்தூரில் சஷ்டி விழா தொடங்கியது... 18ம் தேதி சூரசம்ஹாரம்!

300 டன் பட்டாசு குப்பை சேகரிப்பு... விடிய விடிய பணியாற்றிய 19,600 தூய்மைப் பணியாளர்கள்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in