ஈரோட்டில் அதிர்ச்சி! அதிகாலையில் கோர விபத்து... 3 பேர் உயிரிழப்பு!

ஈரோட்டில் அதிர்ச்சி! அதிகாலையில் கோர விபத்து... 3 பேர் உயிரிழப்பு!

ஈரோடு மாவட்டத்தில் உள்ள சின்னனூர் கிராமத்தில், ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த கார் மரத்தில் மோதிய விபத்தில் 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

பங்களாப்புதூரை சேர்ந்த ஐந்து பேர் தீபாவளி கொண்டாட சொந்த ஊருக்கு சென்றுவிட்டு, இன்று அதிகாலை தங்கள் இல்லத்திற்கு திரும்பும்போது ஓட்டுநர் கட்டுப்பாட்டை இழந்த கார், மரத்தில் மோதி விபத்துக்குள்ளானது. இதில் மூன்று பேர் உயிரிழந்த நிலையில், இரண்டு பேர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீஸார் விபத்தில் பலியானவர்கள் விவரம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். தீபாவளி கொண்டாடிவிட்டு திரும்பும்போது விபத்தில் உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in