களமிறங்கிய 19,600 தூய்மைப் பணியாளர்கள்... இரவு முழுவதும் விடாமல் பணி! 300 டன் பட்டாசு குப்பை சேகரிப்பு!

களமிறங்கிய 19,600 தூய்மைப் பணியாளர்கள்... இரவு முழுவதும் விடாமல் பணி! 300 டன் பட்டாசு குப்பை சேகரிப்பு!
Updated on
1 min read

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, சென்னை முழுவதும் பொதுமக்கள் பட்டாசு வெடித்ததில் தெருக்களில் குப்பைகள் நிரம்பி வழிந்த நிலையில், இரவு முழுவதும் தூய்மைப் பணியாளர்கள் விடாமல் பணி செய்து 300 டன் குப்பையை அகற்றியுள்ளனர்.

இரவு முழுக்க விடாமல் பட்டாசு கழிவுகளை அகற்றும் பணியில் தூய்மைப் பணியாளர்கள் ஈடுபட்டு வருகிறார்கள். நேற்று மாலை தொடங்கிய சுத்திகரிப்பு பணிகள் இன்னும் நடந்து வருகின்றன. பல இடங்களில் இருக்கும் குப்பைகளை கைகளால் அள்ளி அதற்கு உரிய வாகனங்களில் ஏற்றி அனுப்பி வருகிறார்கள். பட்டாசு பேப்பர்கள் தெருக்களை நிரப்பி உள்ளன. இந்த பேப்பர்களை அகற்றும் பணிகள் நடந்து வருகின்றன. மாநகராட்சி கணக்குப்படி 300 டன் குப்பைகள் சேர்ந்துள்ளன.

சேகரித்த குப்பைகளை தரம் பிரித்து அனுப்பும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில், இரவு முழுவதும் பணி செய்த தூய்மைப் பணியாளர்களை சென்னை மாநகராட்சி ஆணையர் நேரில் பாராட்டினார். அப்போது பேசிய அவர், ‘’சென்னையில் நேற்று இரவு வரை, சுமார் 100 டன் பட்டாசு கழிவுகள் அகற்றப்பட்டுள்ளது. இன்று இரவுக்குள் கழிவுகளை முழுமையாக அகற்ற நடவடிக்கை எடுத்துள்ளதாக மாநகராட்சி தெரிவித்துள்ளது. 200 டன் வரை பட்டாசு கழிவுகள் சேகரிக்க வாய்ப்பு உள்ளது. இதற்காக மட்டும் 19,600 தூய்மைப் பணியாளர்கள் இரவு முழுக்க பணிகளை செய்து வருகின்றனர்’’ என குறிப்பிட்டார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in