பெரும் சோகம்... பட்டாசு வெடித்த 4 வயது சிறுமி உயிரிழிப்பு!

உயிரிழந்த சிறுமி
உயிரிழந்த சிறுமி

ராணிப்பேட்டை மாவட்டத்தில் நாட்டு பட்டாசு வெடித்து சிதறியதில், 4 வயது சிறுமி உயிரிழந்துள்ள சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ராணிப்பேட்டை மாவட்டம் கலவை அடுத்த மாம்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் ரமேஷ். இவர் ஓட்டுநராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி அஸ்வினி. இவர்களுக்கு திருமணமாகி 4 வயதில் ஒரு பெண் குழந்தையும், ஒரு வயதில் ஆண் குழந்தையும் உள்ளது. இந்நிலையில், ரமேஷ் தனது குடும்பத்தினருடன் இணைந்து பட்டாசு வெடித்து தீபாவளி பண்டிகையைக் கொண்டாடியுள்ளார்.

அப்போது ரமேஷின் அண்ணன் விக்னேஷ் நாட்டு பட்டாசு வெடித்துக் கொண்டிருந்ததாகக் கூறப்படுகிறது. அந்த பட்டாசு அருகில் நின்றுக் கொண்டிருந்த சிறுமியின் மீது விழுந்து வெடித்து சிதறியுள்ளது. இந்த சம்பவத்தில் சிறுமி படுகாயம் அடைந்த நிலையில் அவரை உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். மருத்துவமனைக்கு அழைத்து செல்லும் வழியிலேயே சிறுமி பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பட்டாசு வெடித்ததில் சிறுமி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக வாழைபந்தல் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in