ஆசிய விளையாட்டுப் போட்டியில் அசத்தல்: ஸ்குவாஷில் தினேஷ் கார்த்திக் மனைவி தங்கப்பதக்கம்

ஆசிய விளையாட்டு போட்டிகளில் இந்திய ஸ்குவாஷ் அணிக்கு தங்கப்பதக்கம்
ஆசிய விளையாட்டு போட்டிகளில் இந்திய ஸ்குவாஷ் அணிக்கு தங்கப்பதக்கம்

ஆசிய விளையாட்டுப் போட்டிகளின் ஸ்குவாஷ் பிரிவில் இந்திய அணி அசத்தல் வெற்றி பெற்றதை அடுத்து இந்தியாவிற்கு 20வது தங்கப்பதக்கம் கிடைத்துள்ளது.

சீனாவின் ஹாங்சோவ் நகரில் நடைபெற்று வரும் ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இந்தியா 19 தங்கத்துடன் 4வது இடத்தில் நீடித்து வந்தது. இன்று நடைபெற்ற ஸ்குவாஷ் இறுதிப் போட்டியில் கலப்பு இரட்டையர் பிரிவில், இந்தியாவின் தீபிகா பள்ளிகல், ஹரிந்தர்பால் சிங், இணை மலேசியாவின் ஐஃபா, சியாபிஃப் இணையை எதிர்கொண்டது. இரு அணிகளும் ஒன்றுக்கொன்று சளைத்தவை இல்லை என்பது போல் அடுத்தடுத்து புள்ளிகளை பெற்று வந்த நிலையில் முதல் செட்டை 11- 10 என இந்திய அணி கைப்பற்றியது.

இரண்டாவது செட்டிலும் ஆரம்ப முதல் மலேசிய அணி அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய நிலையில், இறுதி நேரத்தில் இந்திய அணி கிடைத்த வாய்ப்புகளை பயன்படுத்தி அடுத்தடுத்து புள்ளிகளை பெற்றது. இதனால் போட்டி நேர முடிவில் 11-10 என இரண்டாவது செட்டையும் இந்திய அணி கைப்பற்றியது.

கலப்பு இரட்டையர் பிரிவில் இந்தியாவின் தீபிகா-ஹரிந்தர் இணை தங்கம் வென்றது
கலப்பு இரட்டையர் பிரிவில் இந்தியாவின் தீபிகா-ஹரிந்தர் இணை தங்கம் வென்றது

இதன் மூலம் 11-10, 11-10 என்ற 2 நேர் செட்களில், மலேசியா அணியை வீழ்த்தி இந்திய அணி தங்கப்பதக்கம் வென்றது. இதன் மூலம் இந்தியாவிற்கு 20வது தங்கப்பதக்கம் கிடைத்துள்ளது . தீபிகா பதக்கம் வென்றுள்ளதை அவரது கணவரும், இந்திய கிரிக்கெட் அணி வீரருமான தினேஷ் கார்த்திக், தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டு மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in