மனைவியின் டார்ச்சர்… விவாகரத்து பெற்றார் ஷிகர் தவான்!

மனைவியின் டார்ச்சர்… விவாகரத்து பெற்றார் ஷிகர் தவான்!

பிரபல கிரிக்கெட் வீரர் ஷிகர் தவானுக்கு டெல்லி உயர்நீதிமன்றம் விவாகரத்து வழங்கியது.

தன்னைவிட 10 வயது மூத்த, ஏற்கனவே திருமணம் ஆகி விவகாரத்து பெற்று இரண்டு குழந்தைகளுடன் வாழ்ந்து வந்த ஆயிஷா முகர்ஜி என்ற பெண்ணை ஷிகர் தவான் கடந்த 2012-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.

அதைத் தொடர்ந்து நீதிமன்றம் நடத்திய விசாரணையில் மனைவி ஆயிஷா முகர்ஜி, தவானை மனரீதியில் டார்ச்சர் செய்தது தெரியவந்தது. மேலும் ஷிகர் தவான் பணத்தில் ஆஸ்திரேலியாவில் மூன்று வீடுகளை வாங்கி, அதனை தனது பெயருக்கு எழுதிக் கொடுக்க அவர் வற்புறுத்தியதும் தெரியவந்தது.

இதனால் விவாகரத்து வழக்கு தாக்கல் செய்த தவான், தனக்கும் ஆயிஷா முகர்ஜிக்கும் பிறந்த மகனை காண நீதிமன்றம் அனுமதி அளிக்க வேண்டும் என  கூறியிருந்தார். மகனை டெல்லியில் வந்து பார்க்க ஏற்பாடு செய்வதாக  கூறியிருந்த ஆயிஷா முகர்ஜி, அதன்படி நடந்து கொள்ளவில்லை என தெரிகிறது.

இந்நிலையில் விவாகரத்து வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்த போது, ஷிகர் தவான் தரப்பு வைத்த குற்றச்சாட்டுக்கு ஆயிஷா முகர்ஜி தரப்பில் விளக்கம் தரப்படவில்லை. எனவே, தவானுக்கு டார்ச்சர் கொடுத்தது உறுதி என்று கூறிய நீதிபதி, இருவருக்கும் விவாகரத்து வழங்குவதாக அறிவித்தார்.

மேலும் மகனை அடிக்கடி இந்தியா அழைத்துவந்து ஷிகர் தவானை சந்திக்க வைக்க வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார். இதன் மூலம் ஷிகர் தவானின் குடும்ப பிரச்சினை தற்போது முடிவுக்கு வந்துள்ளது.

இதையும் வாசிக்கலாமே...

HBD சோ : எம்.ஜி.ஆர்., கலைஞர், ஜெயலலிதா, ரஜினி... இறுதி வரை ‘கெத்து’ காட்டிய ஆளுமை!

திமுக எம்.பி ஜெகத்ரட்சகன் தொடர்புடைய இடங்களில் வருமானவரித்துறை சோதனை!

அதிர்ச்சி… சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியின் மகள் தற்கொலை!

அதிகாலையில் அதிர்ச்சி... போராட்டம் நடத்திய ஆசிரியர்கள் கைது!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in