அதிர்ச்சி… சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியின் மகள் தற்கொலை!

அதிர்ச்சி… சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியின் மகள் தற்கொலை!

சென்னை அபிராமபுரத்தில் நீதிபதியின் மகள் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிபதியாக பதவி வகித்து வரும் குமரேஷ் பாபு, அதிமுக பொதுக்குழு வழக்கு, அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மீதான நில அபகரிப்பு வழக்கு உள்ளிட்ட முக்கிய வழக்குகளை விசாரித்து தீர்ப்பு வழங்கியவர்.

இவர் சென்னை அபிராமபுரத்தில் வசித்து வருகிறார். இவரது மகள் கிரா, தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். இந்நிலையில் நேற்று மாலை கிரா திடீரென்று தனது வீட்டு அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதையடுத்து அவரை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் கிரா ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டது. கிரா தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் தெரியவில்லை. இச்சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in