பரபரப்பு… டிபிஐ வளாகத்தில் போராட்டம் நடத்திய ஆசிரியர்கள் கைது!

பரபரப்பு… டிபிஐ வளாகத்தில் போராட்டம் நடத்திய ஆசிரியர்கள் கைது!
Updated on
1 min read

சம வேலை சம ஊதியம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்தி வந்த ஆசிரியர்கள் குண்டுக்கட்டாக போலீஸாரால் கைது செய்யப்பட்டனர்.

சம வேலைக்கு சம ஊதியம் கோரி இடைநிலை ஆசிரியர்களும், முழு நேரம் பணி வழங்கக்கோரி பகுதிநேர சிறப்பு ஆசிரியர்களும், டெட் தேர்வில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்கள் போட்டித்தேர்வை ரத்து செய்து, வேலைவாய்ப்பு பதிவு மூப்பு அடிப்படையில் பணி நியமனம் செய்யக்கோரியும் நுங்கம்பாக்கம் டிபிஐ வளாகத்தில் போராட்டம் நடத்தி வந்தனர்.

இந்நிலையில் ஆசிரியர் சங்கங்களின் கோரிக்கைகள் தொடர்பாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி நேற்று சென்னை தலைமை செயலகத்தில் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர்,
இடைநிலை ஆசிரியர்களின் கோரிக்கைகளை அரசுக்கு பரிந்துரைக்க 3 பேர் கொண்ட குழு அமைக்கப்பட உள்ளதாக தெரிவித்தார். பகுதி நேர ஆசிரியர்களின் ஊதியம் 12,500 ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும் என்றார்.

எனவே, அரசு மீது நம்பிக்கை வைத்து ஆசிரியர்கள் போராட்டத்தை முடித்துக்கொண்டு பணிக்கு திரும்ப வேண்டும் என்று அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கேட்டுக்கொண்டார். ஆனால் தங்கள் கோரிக்கைகளை நிறைவேற்றும் வரை போராட்டம் தொடரும் என ஆசிரியர்கள் தெரிவித்தனர்.

இந்நிலையில், டிபிஐ வளாகத்தில் போராட்டம் நடத்தி வந்த ஆசிரியர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். அவர்களை பேருந்தில் ஏற்றி போலீசார் அழைத்து சென்றனர். இதனால் டிபிஐ வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in