ஹர்திக் பாண்டியாவை செருப்பால் அடிக்கும் ரசிகர்கள்.. வெளியானது அதிர்ச்சி வீடியோ!

ஹர்திக் பாண்டியா, ரோகித் ஷர்மா
ஹர்திக் பாண்டியா, ரோகித் ஷர்மா

மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா தொலைக்காட்சியில் பேசும்போது ரசிகர்கள் செருப்பால் அடிக்கும் வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஐபிஎல் அணிகள்
ஐபிஎல் அணிகள்

நடப்பாண்டுக்கான ஐபிஎல் போட்டிகள் கடந்த 22-ஆம் தேதி முதல் தொடங்கி சென்னை, ஹைதராபாத், மும்பை உள்ளிட்ட மாநிலங்களில் நடைபெற்று வருகிறது. நேற்று இரவு வரை நடைபெற்ற போட்டிகளில், இதுவரை இரண்டு போட்டிகளில் விளையாடிய சென்னை அணி, இரண்டிலும் வெற்றி பெற்று பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. இதேபோல் ராஜஸ்தான் அணி இரண்டாவது இடத்திலும், ஹைதராபாத் அணி மூன்றாவது இடத்திலும் உள்ளது. இரண்டு போட்டிகளில் விளையாடிய மும்பை அணி இரண்டிலும் தோல்வியை தழுவி 9-வது இடத்திலும், ஒரு போட்டியில் விளையாடி, அதிலும் தோல்வி அடைந்த லக்னோ அணி 10-வது இடத்திலும் உள்ளது.

இந்த நிலையில், ஐபிஎல் தொடரில் 5 கோப்பைகளை வென்ற மும்பை அணி கடந்த சில ஆண்டுகளாகவே தங்களது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை. இதனால் அதிருப்தி அடைந்த மும்பை அணி நிர்வாகம், அந்த அணி கேப்டனாக இருந்த ரோகித் ஷர்மாவை மாற்றி, அவருக்கு பதில், குஜராத் அணியின் கேப்டனாக இருந்த ஹர்த்திக் பாண்டியாவை மாற்றியது. இதனால் ரோகித் ஷர்மா ரசிகர்கள் கடும் அதிருப்தி அடைந்தனர். இதேபோல், தன் சொந்த மாநிலமான குஜராத் அணிக்கு விளையாடாமல், மும்பை அணிக்கு சென்ற ஹர்திக் பாண்டியா மீது குஜராத் மாநில ரசிகர்களும் கோபமடைந்தனர்.

இது ஒருபுறம் இருக்க, கடந்த முதல் போட்டியில், குஜராத் அணியுடன் மோதிய போது, முன்னாள் கேப்டன் என பார்க்காமல் ரோகித் ஷர்மாவை மைதானத்தில் அங்கும் இங்கும் பீல்டிங் செய்ய அலைக்கழித்த ஹர்திக் மீது மீண்டும் ரசிகர்கள் ஆத்திரமடைந்தனர். சமூகவலைதளங்களில் அவரை கடுமையாக விமர்சித்தனர்.

இந்த நிலையில்தான் தங்களது இரண்டாவது போட்டியில், நேற்று ஹைதராபாத் அணியை சந்தித்த மும்பை அணி மீண்டும் தோல்வியை தழுவியது. இதனால் மீண்டும் கோபத்தின் உச்சத்துக்கு சென்ற ரசிகர்கள், ஹர்திக் பாண்டியா பேட்டி கொடுக்கும் திரையின் மீது, செருப்பை வீசி தங்களது அதிருப்தியை வெளிப்படுத்தினர். இந்த வீடியோ இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் வாசிக்கலாமே...  

இன்று பரிசீலனை.. தமிழகத்தில் 39 தொகுதிகளில் 1,403 பேர் வேட்புமனு தாக்கல்!

கை சின்னத்துக்கு வாக்களியுங்கள்; பழசை மறக்காத ஜி.கே.வாசன்... பம்பரத்துக்கு ஓட்டு கேட்ட சி.வி.சண்முகம்!

முதல்ல எல்லா பூத்களுக்கும் ஏஜென்ட் போடமுடியுதானு பாருங்க?... பாஜகவை பங்கம் செய்த வேலுமணி!

அக்காவை தோற்கடித்து, தம்பியை வெற்றி பெற வைக்க வேண்டும்... அமைச்சர் பன்னீர்செல்வத்துக்கு இப்படி ஒரு வேலை!

தேறுவாரா திருமா... சிதம்பரம் தொகுதி நிலவரம்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in