'சாதிப் பெயர்களை கைவிடுங்க...’ இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கு கார்த்தி சிதம்பரம் திடீர் வலியுறுத்தல்

காங்கிரஸ் எம்.பி., கார்த்தி சிதம்பரம்
காங்கிரஸ் எம்.பி., கார்த்தி சிதம்பரம்

‘இந்திய கிரிக்கெட் வீரர்களின் பெயரின் பின்னால் இருக்கும் சாதிப் பெயர்களை நீக்க பிசிசிஐ அறிவுறுத்த வேண்டும்’ என காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் வலியுறுத்தியுள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணியில் விளையாடும் வீரர்களில் குறிப்பிட்ட சிலர், தங்களது பெயர்களுக்கு பின் சாதிப்பெயர்களை பயன்படுத்தி வருகின்றனர். இதை நீக்க வேண்டும் என பல்வேறு தரப்பினரும் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர். அனைவரும் ரசிக்கும் கிரிக்கெட் போன்ற விளையாட்டுகளில், இந்திய வீரர்கள் தங்களது சாதிப்பெயர்களை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டு வருகிறது.

இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள்
இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள்

இந்திய அணியில் விளையாட்டும், ரோகித் சர்மா, ஸ்ரேயாஸ் ஐயர், சூர்ய குமார் யாதவ், குல் தீப் யாதவ் உள்ளிட்ட முன்னணி வீரர்கள் தங்களது பெயருக்கு பின்னால் சாதியை அடையாளமாக வைத்துள்ளனர். இந்நிலையில், கிரிக்கெட் வீரர்கள் தங்களது பெயர்களுக்கு பின் உள்ள சாதிப்பெயர்களை நீக்க பிசிசிஐ அறிவுறுத்த வேண்டும் என காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் தனது எக்ஸ் தள பக்கத்தில் வலியுறுத்தியுள்ளார்.

காங்கிரஸ் எம்.பி., கார்த்தி சிதம்பரம்
காங்கிரஸ் எம்.பி., கார்த்தி சிதம்பரம்

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in