ஆதிக்கம் செலுத்தப்போவது யார்? இந்தியா – தென்னாப்பிரிக்கா இன்று மோதல்!

இந்தியா - தென்னாப்பிரிக்கா
இந்தியா - தென்னாப்பிரிக்கா

உலகக்கோப்பை தொடரின் இன்றைய போட்டியில் பலம் வாய்ந்த இந்தியா, தென்னாப்பிரிக்கா அணிகள் மோத உள்ளதால் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

புள்ளிவரிசை பட்டியலில் இந்தியா, தென்னாப்பிரிக்கா ஆகிய அணிகள் முறையே முதல் இரண்டு இடங்களில் உள்ளன. இவ்விரு அணிகளும் அரையிறுதிக்கு தகுதியும் பெற்றுவிட்டன. இந்நிலையில், இன்று தென்னாப்பிரிக்கா – இந்தியாவுக்கு இடையேயான போட்டி நடைபெற உள்ளது.

விளையாடியுள்ள 7 போட்டிகளில் இந்தியா அனைத்திலும் வெற்றி பெற்றுள்ள நிலையில், தென்னாப்பிரிக்கா ஒரு போட்டியில் நெதர்லாந்திடம் தோல்வியை தழுவியது. எனவே இன்றைய ஈடன் கார்டன் மைதான போட்டியில் இந்தியாவை வீழ்த்த, தென்னாப்பிரிக்கா கடும் முயற்சி மேற்கொள்ளும் என்பதில் சந்தேகமில்லை.

இரு அணி வீரர்களும் நல்ல பார்மில் உள்ளனர். இந்திய அணியில் ஹர்திக் பாண்ட்யா இல்லை என்றாலும் ஷமி உள்ளே வந்து கலக்கி வருகிறார். அதே போல் பேட்டிங்கில் ரோகித், கோலி, ராகுல், கில், ஷ்ரேயஸ் என அனைவரும் சிறப்பாக விளையாடி வருகின்றனர்.

அதே நேரத்தில் தென்னாப்பிரிக்காவில் டி காக் அதிக ரன் அடித்த வீரர் பட்டியலில் முதலிடத்தில் உள்ளார். அதே போல், வான்டெர் டஸன், கிளாசன், மார்க்ரம், மில்லர் என வீரர்கள் வரிசைகட்டி நிற்கின்றனர். பந்து வீச்சிலும் ரபாடா, கேஷவ் மகராஜ், யான்சென் என தென்னாப்பிரிக்கா பலமாக உள்ளது.

இந்த சூழலில் தான் இந்தியா, தென்னாப்பிரிக்கா அணிகள் இன்று பலப்பரீட்சை நடத்துகின்றன. எனவே, இன்றைய போட்டியில் விறுவிறுப்புக்கு நிச்சயம் பஞ்சம் இருக்காது. கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் மதியம் 2 மணிக்கு போட்டி தொடங்குகிறது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in