ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் - சாம்பியன் பட்டம் வென்றது ரோஹன் போபண்ணா - மேத்யூவ் ஜோடி!

சாம்பியன் பட்டம் வென்ற போபண்ணா - எப்டன் ஜோடி
சாம்பியன் பட்டம் வென்ற போபண்ணா - எப்டன் ஜோடி
Updated on
2 min read

ஆடவர் இரட்டையர் பிரிவு இறுதிப் போட்டியில் ரோஹன் போபண்ணா - மேத்யூவ் எப்டன் ஜோடி சாம்பியன் பட்டம் வென்றது.

பட்டம் வென்ற சபலெங்கா
பட்டம் வென்ற சபலெங்கா

உலக அளவில் நடைபெறும் 4 கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடர் மெல்பர்ன் நகரில் நடைபெற்று வருகிறது. உலக அளவில் பல்வேறு நாடுகளில் இருந்து 128 வீரர், வீராங்கனைகள் இந்த தொடரில் கலந்துகொண்டனர். கடந்த 14ம் தேதி தொடங்கிய போட்டிகள் நாளையும் நிறைவடைகிறது. இந்நிலையில், இன்று மகளிர் ஒற்றையர் பிரிவு மற்றும் ஆடவர் இரட்டையர் பிரிவு இறுதி ஆட்டங்கள் நடைபெற்றன. இதில் முதலில் நடைபெற்ற மகளிர் ஒற்றையர் பிரிவு இறுதிப் போட்டியில் பெலாரசின் அரினா சபலெங்கா சாம்பியன் பட்டம் வென்றார்.

சாம்பியன் பட்டம் வென்ற போபண்ணா - எப்டன் ஜோடி
சாம்பியன் பட்டம் வென்ற போபண்ணா - எப்டன் ஜோடி

இன்று நடைபெற்ற ஆடவர் இரட்டையர் பிரிவு ஆட்டத்தில் இந்தியாவின் ரோஹன் போபண்ணா - அமெரிக்காவின் மேத்யூவ் எப்டன் ஜோடி - இத்தாலியின் சிமோன் பொலேல்லி, ஆண்ட்ரியா வவசோரி ஜோடியை எதிர்கொண்டது.

பரபரப்பான இந்த ஆட்டத்தில் முதல் சுற்று 6-6 என சமனில் முடிவடைந்தது. இதையடுத்து, அந்த செட்டின் வெற்றியை முடிவு செய்ய டை பிரேக்கர் வைக்கப்பட்டது. அதனை 7-0 என்ற கணக்கில் போபண்ணா - எப்டன் ஜோடி கைப்பற்றியது. இதையடுத்து, இரண்டாவது சுற்று ஆட்டத்தில் அதிரடியாக விளையாடி போபண்ணா ஜோடி 7-5 என்ற கணக்கில் கைப்பற்றியது. இதன் மூலம் 2-0 என்ற நேர் செட்களில் வெற்றி பெற்று கிராண்ட்ஸ்லாம் பட்டத்தையும் இந்த இணை கைப்பற்றியது.

இதையும் வாசிக்கலாமே...


தமிழ்நாட்டுக்கு முதலீடுகளை ஈர்க்க இன்று இரவு ஸ்பெயின் புறப்படுகிறர் முதல்வர் மு.க.ஸ்டாலின்!

அன்பு மகளே....இளையராஜா கண்ணீர் பதிவு!

விஜய் எனக்குப் போட்டி என்றால் மரியாதை இல்லை... ரஜினி பரபர பேச்சு!

மூன்று தொகுதிகள் வேண்டும்... முரண்டு பிடிக்கும் கமல்... திகைக்கும் திமுக!

ஆட்சியைக் கவிழ்க்க திட்டம்... 15 எம்எல்ஏக்களை இழுக்க பேரம்... முன்னாள் முதல்வரின் முயற்சியால் பரபரப்பு!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in