நடிகர் ரஜினிகாந்த்...
நடிகர் ரஜினிகாந்த்...

விஜய் எனக்குப் போட்டி என்றால் மரியாதை இல்லை...ரஜினி பரபர பேச்சு!

Published on

விஜய் எனக்குப் போட்டி என்றால் எனக்கு மரியாதை இல்லை. நான் அவருக்குப் போட்டி என்றால் அவருக்கு மரியாதை இல்லை என நேற்று நடைப்பெற்ற ‘லால் சலாம்’ படத்தின் இசை வெளியீட்டு விழாவில் நடிகர் ரஜினிகாந்த் பேசியுள்ளார்.

’லால் சலாம்’ விழாவில்...
’லால் சலாம்’ விழாவில்...

நடிகர் ரஜினிகாந்தின் ‘ஜெயிலர்’ பட இசை வெளியீட்டின் போது நடிகர் ரஜினிகாந்த் ‘காக்கா-கழுகு’ குட்டிக் கதை ஒன்றைச் சொன்னார். இதில் காகம் என நடிகர் விஜயைத் தான் ரஜினி குறிப்பிடுகிறார் என ரசிகர்கள் மத்தியில் சலசலப்பு எழுந்தது. இதனை அடுத்து நடந்த ‘லியோ’ வெற்றி விழாவிலும் நடிகர் விஜய் ரஜினிக்கு பதில் சொல்லும் விதமாக, ‘அப்பாவைப் போல மகன் வரவேண்டும் என்று ஆசைப்பட்டால் என்ன தப்பு? அவர் எப்போது சூப்பர் ஸ்டார்தான்’ என்று சொன்னார். அந்த வகையில் தற்போது, ரஜினி, விஷ்ணு விஷால் நடிப்பில் அடுத்த மாதம் வெளியாகவுள்ள ‘லால் சலாம்’ படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று மாலை நடைபெற்றது. இந்த விழாவில் பேசிய ரஜினி, தனது ‘காகம்-கழுகு’ சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

“நடிகர் விஜய் எனக்கு முன்னாள் வளர்ந்த பையன். நடிகர் விஜயை சின்ன வயதிலிருந்தே பார்த்து வருகிறேன். ’தர்மத்தின் தலைவன்’ படப்பிடிப்பின் போது விஜயின் தந்தை என்னிடம் வந்து, என்னுடைய பையன் படித்து வருகிறான். அவனுக்கு நடிப்பின் மீது ஆர்வம் அதிகமாக உள்ளது. நீங்கள் கூறுங்கள் அவன் படித்துவிட்டு வந்தவுடன் நடிக்க வேண்டுமென தெரிவித்தார். அதன் பிறகு விஜய் நடிப்பிற்கு வந்து தனது உழைப்பால் உயர்ந்து உள்ளார். நன்றாக நடித்து வருகிறார்.

’லால் சலாம்’ விழாவில்...
’லால் சலாம்’ விழாவில்...

தற்போது அரசியலுக்கு வரும் முயற்சியில் உள்ளார். அவருக்கு என்னுடைய வாழ்த்துக்கள்! தற்போது விஜய்க்கும் எனக்கும் போட்டி என கூறுவது மிகவும் கவலை அளிக்கிறது. நான் சொன்ன ‘காகம்-கழுகு’ கதை தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டு விட்டது. அவரும் மேடையில் எனக்கு போட்டி நான் தான் என கூறியுள்ளார். நடிகர் விஜய் எனக்கு போட்டியாக நினைத்தால் அது எனக்கு மரியாதை இல்லை. நானும் விஜய்க்கு போட்டி என நினைத்தால் அவருக்கும் மரியாதை இல்லை. தயவுசெய்து என்னுடைய மற்றும் அவருடைய ரசிகர்கள் காக்கா கழுகு கதையை இத்துடன் நிறுத்திக் கொள்ள வேண்டும்” என்று பேசியுள்ளார்.

x
காமதேனு
kamadenu.hindutamil.in