தமிழ்நாட்டுக்கு முதலீடுகளை ஈர்க்க இன்று இரவு ஸ்பெயின் புறப்படுகிறர் முதல்வர் மு.க.ஸ்டாலின்!

உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் முதல்வர் மு.க.ஸ்டாலின்
உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் முதல்வர் மு.க.ஸ்டாலின்
Updated on
1 min read

இன்று இரவு, தொழில் முதலீடு தொடர்பாக தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஸ்பெயின் பயணம் மேற்கொள்ள உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஸ்பெயினில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் பல்வேறு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட உள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன.

சமீபத்தில் சென்னையில் நடந்த முதலீட்டாளர்கள் மாநாட்டில் சுமார் ரூ. 6 லட்சம் கோடிக்கு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தான நிலையில், மேலும் வெளிநாட்டு முதலீட்டை ஈர்ப்பதற்காக இன்று இரவு முதல்வர் ஸ்டாலின் வெளிநாடு செல்லவுள்ளார்.

இன்று இரவு 8.45 மணிக்கு சென்னை விமான நிலையத்திலிருந்து துபாய் செல்லும் முதல்வர், அங்கிருந்து ஸ்வீடன் சென்று அதன் பின்னர் ஸ்பெயின் செல்லவுள்ளார்.

ஸ்பெயினுக்கு செல்லும் முதல்வர், அங்கு பல்வேறு நாட்டு தொழிலதிபர்களையும், அரசு பிரதிநிதிகளையும் சந்தித்து பேசுகிறார். முதல்வரின் இந்த 10 நாட்கள் பயணத்தில் ஸ்பெயின் மட்டுமல்லாது இங்கிலாந்து, ஆஸ்திரேலியா மற்றும் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளுக்கும் முதல்வர் ஸ்டாலின் செல்ல உள்ளதாக கூறப்படுகிறது. தனது வெளிநாட்டு பயணத்தை முடித்துக் கொண்டு பிப்ரவரி 7ம் தேதி மீண்டும் சென்னை திரும்புகிறார் முதல்வர் ஸ்டாலின்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in