குடும்பத் தலைவிகள் குதூகலம்... வங்கிக் கணக்கில் வந்து சேர்ந்தது 1,000 ரூபாய் உரிமைத் தொகை!

கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம் தொடக்கம்
கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம் தொடக்கம்
Updated on
2 min read

மாதந்தோறும் பெண்களுக்கு வழங்கப்பட்டு வரும் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை இன்று காலையிலேயே அவர்களின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளது.

கடந்த சட்டப்பேரவைத் தேர்தலின் போது திமுக தனது தேர்தல் வாக்குறுதியில் அறிவித்திருந்தபடி இல்லத்தரசிகளுக்கு மாதம் ஆயிரம் வழங்கும் திட்டத்தை கடந்த  ஆண்டு செப்டம்பர் 15-ம் தேதி தொடங்கியது. ஒரு கோடியே 6 லட்சம் இல்லத்தரசிகளுக்கு அன்று அவர்களின் வங்கிக் கணக்கில் ரூபாய் 1,000 வரவு வைக்கப்பட்டது. அதில் விடுபட்டவர்கள் மீண்டும் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்ட நிலையில் மேலும் 11 லட்சம் பெண்கள் விண்ணப்பித்தனர்.

அவர்களில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு தற்போது ஒரு கோடியே 15 லட்சம் பேருக்கு கலைஞர் மகளிர் உரிமைத்தொகை வழங்கப்பட்டு வருகிறது. இந்த தொகை ஏழை, எளிய பெண்களுக்கு பெரும் உதவியாக உள்ளது.

இதுகுறித்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் "குடும்பத்திற்காக வாழ்நாள் முழுவதும் ஓயாமல் உழைத்துக் கொண்டிருக்கும் பெண்களின் உழைப்பிற்கு அங்கீகாரம் அளிக்கும் வகையில், அவர்களுக்கு ஆண்டிற்கு ரூபாய் 12,000 உரிமைத் தொகை வழங்கும் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டமானது பெண்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தி, வாழ்க்கைத் தரத்தை உயர்த்தி, சமூகத்தில் அவர்கள் சுயமரியாதையோடு வாழ்வதற்கு வழிவகுக்கும் உயரிய நோக்கம் கொண்டது" என்று பெருமையோடு தெரிவித்திருந்தார். 

இந்தத் திட்டத்தில் ஜனவரி மாதம்  கூடுதல் பயனாளிகள் சேர்க்கப்பட்டனர். இந்த நிலையில் தற்போது இலங்கைத் தமிழர்  மறுவாழ்வு முகாம் பெண்களுக்கும் திட்டம் விரிவுபடுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில் எதிர்வரும் மக்களவைத் தேர்தலை முன்னிட்டு கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம் மேலும் விரிவுபடுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த மாதமும் அதற்கு முந்தைய மாதமும் 15-ம் தேதிக்கு முன்னரே பெண்களின் வங்கிக்கணக்கில் வரவு வைக்கப்பட்ட உரிமைத் தொகை இந்த மாதம் திட்டம் அறிவிக்கப்பட்டபோது கூறியபடி 15-ம் தேதி சரியாக வரவு வைக்கப்பட்டுள்ளது. இதனால் இதை எதிர்பார்த்து இருந்த இல்லத்தரசிகள் மிகவும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

இதையும் வாசிக்கலாமே...

இன்று தொடங்குகிறது சிபிஎஸ்இ தேர்வுகள்... 39 லட்சம் மாணவர்கள் எழுதுகின்றனர்!

பாஜக நிர்வாகி ஓட ஓட வெட்டிக் கொலை...மதுரை சுங்கச்சாவடி அருகே பயங்கரம்!

அரசியல் கட்சிகளுக்கு நன்கொடை... தேர்தல் பத்திரத் திட்ட வழக்கில் இன்று தீர்ப்பு!

சீமானுக்கு அதிர்ச்சி கொடுத்த தேர்தல் ஆணையம்... கைவிட்டு போனது ‘விவசாயி சின்னம்’!

சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் 60,000 ரூபாய் சம்பளத்தில் வேலை... விண்ணப்பிக்க இன்றே கடைசி தேதி!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in