இன்று தொடங்குகிறது சிபிஎஸ்இ தேர்வுகள்... 39 லட்சம் மாணவர்கள் எழுதுகின்றனர்!

தேர்வு எழுதும் மாணவர்கள்
தேர்வு எழுதும் மாணவர்கள்

நாடு முழுவதும் மத்திய இடைநிலை கல்வி வாரியத்தின் (சிபிஎஸ்இ) 10-ம் வகுப்பு, மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு இன்று  தொடங்குகிறது.

தேர்வு எழுதும் மாணவர்கள்
தேர்வு எழுதும் மாணவர்கள்

இன்று தொடங்கும் சிபிஎஸ்இ தேர்வை, இந்தியா உள்பட பல்வேறு நாடுகளில் 39 லட்சத்துக்கும் அதிகமான மாணவர்கள் எழுதுகின்றனர். இந்த நிலையில், பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள், காலை 10 மணிக்கு முன்பே தேர்வு மையங்களுக்கு வர வேண்டும் என்று சிபிஎஸ்இ அறிவுறுத்தியுள்ளது.

சிபிஎஸ்இ 10-ம் வகுப்பு மற்றும் 12-ம் வகுப்பு  பொதுத்தேர்வுகள் இன்று தொடங்கி ஏப்ரல் 2-ம் தேதி வரை நடைபெறுகிறது. தேர்வு காலை 10.30 மணிக்கு தொடங்கும். அனைத்து பள்ளிகளும் பெற்றோர்களுக்கும், மாணவர்களுக்கும் வழிகாட்டுதல்கள் வழங்க வேண்டும். 

மாணவர்கள்
மாணவர்கள்

இன்று தேர்வுகள் தொடங்கும் நிலையில் சில நாட்களுக்கு முன்னர் சிபிஎஸ்இ 10-ம் வகுப்பு மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களின் பொதுத்தேர்வு வினாத்தாள் முன்கூட்டியே கசிந்துள்ளதாக வலைதளங்களில் தகவல்கள் பரவத் தொடங்கியது. இதனால் பெரிய குழப்பம் ஏற்பட்டது.

மேலும் சிபிஎஸ்இ நிர்வாகம் இதுபற்றி விசாரணையை தொடங்கியது. அந்த விசாரணையில் வினாத்தாள் எதுவும் கசியவில்லை எனவும், அது பற்றிய தகவல்கள் வதந்தி எனவும் தெரியவந்தது. அதைத் தொடர்ந்து திட்டமிட்டபடி இன்று தேர்வுகள் நடைபெறுகிறது. காலை 10 மணிக்குள் தேர்வு மையத்திற்கு வருகை தரும் மாணவர்கள் மட்டுமே தேர்வு எழுத அனுமதிக்கப்படுவர்கள். அதன் பிறகு எந்த மாணவர்களும் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்று சிபிஎஸ்இ சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in