சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் 60,000 ரூபாய் சம்பளத்தில் வேலை... விண்ணப்பிக்க இன்றே கடைசி தேதி!

சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் 60,000 ரூபாய் சம்பளத்தில் வேலை... விண்ணப்பிக்க இன்றே கடைசி தேதி!
Updated on
1 min read

அண்ணா பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள திட்ட விஞ்ஞானி மற்றும் திட்ட உதவியாளர் தற்காலிக பணியிடங்களுக்கு இன்றே விண்ணப்பிக்க கடைசி தேதி என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் பருவநிலை மாற்றம் மற்றும பேரிடர் மேலாண்மை மையம் (Centre for Global Equality) திட்ட விஞ்ஞானி மற்றும் திட்ட உதவியாளர் தற்காலிக பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

விண்ணப்பிக்க விருப்பமுள்ளவர்கள் திட்ட விஞ்ஞானி மற்றும் திட்ட உதவியாளர் என இரண்டு பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். அதற்கு அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனம் அல்லது பல்கலைக்கழகத்தில் இருந்து B.Com./BBA/ h.D. in Climate Change/Environmental Science, with Master’s Degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

எனவே, ஆர்வமுள்ளவர்கள் அனைத்து தகுதி விவரங்களையும் அறிந்து உடனே இப்பணிக்கு விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்டுகிறது. விண்ணப்பிக்க இன்று (பிப்ரவரி 15) கடைசி தேதியாகும். மாதச் சம்பளம் ரூ.60,000.

திட்ட விஞ்ஞானிக்கு மாதச் சம்பளம் ரூ.60,000, திட்ட உதவியாளருக்கு மாதச் சம்பளம் ரூ.24,000. தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப் படிவத்துடன் பயோடேட்டா, மதிப்பெண் தாள்கள் மற்றும் பட்டச் சான்றிதழின் நகல், அனுபவச் சான்றிதழ்கள், ஆராய்ச்சி வெளியீடுகளின் நகல் மற்றும் தென்னிந்திய காலநிலை இணக்கத்தன்மையின் தேவை மற்றும் நோக்கத்தைக் குறிப்பிடும் கருத்துக் குறிப்புடன் சமர்ப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

முழுமையான விண்ணப்பத்தை 15.02.2024 அன்று “The Director, Centre for Climate Change and Disaster Management, அண்ணா பல்கலைக்கழகம், சென்னை – 600 025” என்ற முகவரியில் சமர்பிக்க வேண்டும்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in