வைரலாகும் வில்லங்க வீடியோ... அண்ணாமலைக்கு சால்வை போர்த்திய மூதாட்டிக்கு யோசிக்காமல் ரூ.500ஐ அடித்த அர்ஜுன் சம்பத்!

அண்ணாமலைக்கு சால்வை போர்த்திய மூதாட்டிக்கு பணம் கொடுத்த அர்ஜுன் சம்பத்
அண்ணாமலைக்கு சால்வை போர்த்திய மூதாட்டிக்கு பணம் கொடுத்த அர்ஜுன் சம்பத்

கோயிலில் அண்ணாமலைக்கு சால்வை அணிவித்த மூதாட்டிக்கு இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜுன் சம்பத் ரூ.500 சன்மானம் கொடுக்க முயன்ற வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மக்களவைத் தேர்தலில் கோவை தொகுதியில் பாஜக சார்பில் அக்கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை போட்டியிடுகிறார். “ஓட்டுக்காக ஒரு ரூபாய் கூட கொடுக்க மாட்டேன். குறைந்த செலவில் தேர்தல் நடந்த தொகுதியாக கோவையைக் காட்டுவேன்” என அண்ணாமலை உறுதியளித்திருந்தார். அவரது இந்த கருத்தை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா, எப்பாடி பழனிசாமி ஆகியோர் விமர்சனம் செய்திருந்தனர்.

இந்நிலையில், நேற்று வேட்பு மனு தாக்கல் செய்வதற்கு முன்பு கோவை கோனியம்மன் கோயிலுக்கு சாமி தரிசனம் செய்யச் சென்றிருந்தார் அண்ணாமலை. அப்போது, 1989-ல் படுகொலை செய்யப்பட்ட இந்து முன்னணி பிரமுகர் வீரகணேஷின் தாயாரையும் பாஜகவினர் கோயிலுக்கு அழைத்து வந்திருந்தனர். அவரிடம் அண்ணாமலை ஆசி பெற்ற போது, அவருக்கு பொன்னாடை அணிவிக்கப்பட்டது.

மூதாட்டிக்கு பணம் கொடுத்த சட்டைப்பையை தேடும் அர்ஜுன் சம்பத்
மூதாட்டிக்கு பணம் கொடுத்த சட்டைப்பையை தேடும் அர்ஜுன் சம்பத்

அப்போது உடன் இருந்த இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜுன் சம்பத் சட்டைப் பையில் இருந்து 500 ரூபாயை எடுத்துக் கொடுத்ததாக தெரிகிறது. இது தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. இது தேர்தல் விதிமீறல் என மற்றகடசிகள் விமர்சித்து வருகின்றன.

இதுகுறித்து கேட்ட போது, ”பூசாரிக்கு காணிக்கை அளிப்பதற்காக பணத்தை கொடுத்தேன். ஆனால் பூசாரி அங்கிருந்து சென்றுவிட்டது அப்புறம் தான் தெரிந்தது. அதனால் அந்த பணத்தை நானே வைத்துக்கொண்டேன்” என அர்ஜுன் சம்பத் விளக்கம் அளித்துள்ளார்.

இதையும் வாசிக்கலாமே...  


இன்று பரிசீலனை.. தமிழகத்தில் 39 தொகுதிகளில் 1,403 பேர் வேட்புமனு தாக்கல்!

கை சின்னத்துக்கு வாக்களியுங்கள்; பழசை மறக்காத ஜி.கே.வாசன்... பம்பரத்துக்கு ஓட்டு கேட்ட சி.வி.சண்முகம்!

முதல்ல எல்லா பூத்களுக்கும் ஏஜென்ட் போடமுடியுதானு பாருங்க?... பாஜகவை பங்கம் செய்த வேலுமணி!

அக்காவை தோற்கடித்து, தம்பியை வெற்றி பெற வைக்க வேண்டும்... அமைச்சர் பன்னீர்செல்வத்துக்கு இப்படி ஒரு வேலை!

தேறுவாரா திருமா... சிதம்பரம் தொகுதி நிலவரம்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in