என் வீட்டின் கதவுகள் திறந்தே இருக்கும்...பாஜகவில் சீட் மறுக்கப்பட்ட வருண் காந்தி தொகுதி மக்களுக்கு கடிதம்!

வருண் காந்தி
வருண் காந்தி

உங்களுக்காக என் வீட்டின் கதவுகள் எப்போதும் திறந்திருக்கும் என்று பிலிபித் மக்களவை தொகுதி உறுப்பினர் வருண் காந்தி, அத்தொகுதி மக்களுக்கு உணர்ச்சிபூர்வமாக ஒரு கடிதத்தை எழுதியுள்ளார்.

தாய் மேனகா காந்தியுடன் வருண் காந்தி
தாய் மேனகா காந்தியுடன் வருண் காந்தி

உத்தரப்பிரதேசத்தில் உள்ள பிலிபித் மக்களவைத் தொகுதியில் பாஜக சார்பில் கடந்த 2009, 2019 ஆண்டுகளில் நடைபெற்ற தேர்தல்களில் வெற்றி பெற்றவர் வருண் காந்தி. 2014-ம் ஆண்டு வேர் சுல்தான்பூரில் போட்டியிட்டு இவர் வெற்றி பெற்றார். இவரது தாய், மேனகா காந்தி 2019-ம் ஆண்டு சுல்தான்பூரில் போட்டியிடடு வெற்றி பெற்றார்.

தற்போது நடைபெற உள்ள மக்களவைத் தேர்தலில் பிலிபித் தொகுதியின் உறுப்பினராக உள்ள வருண் காந்திக்கு இம்முறை போட்டியிட பாஜக வாய்ப்பு வழங்கவில்லை. அவருக்குப் பதில் முன்னாள் காங்கிரஸ் தலைவர் ஜிதின் பிரசாதாவுக்கு போட்டியிட பாஜக வாய்ப்பு வழங்கியுள்ளது.

ஒரு காலத்தில் பாஜகவின் முன்னணி தலைவராக இருந்த வருண் காந்திக்கு போட்டியிட வாய்ப்பு வழங்காதது அவரது ஆதரவாளர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிரதமர் நரேந்திர மோடியை வருண் காந்தி விமர்சனம் செய்ததால் தான், அவருக்கு போட்டியிட வாய்ப்பு வழங்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.

வருண் காந்தி
வருண் காந்தி

இந்த நிலையில் தனது தொகுதி மக்களுக்கு வருண் காந்தி உணர்வுப்பூர்வமாக ஒரு கடிதத்தை எழுதியுள்ளார். அதில், “பிலிபித் மக்களவைத் தொகுதியின் உறுப்பினராக இருக்கும் எனது பதவிக்காலம் முடிவடைகிறது. எம்.பி.யாக உங்களுடனான தொடர்பு முடிவுக்கு வரலாம். ஆனால், ஒரு மனிதனாக எனது கடைசி மூச்சு வரை உங்களுடன் இருப்பேன்.

பிலிபித் மக்கள் அற்புதமானவர்கள். இந்த தொகுதியில் எம்.பி.யாக அவர்களுக்கு பணியாற்றியதில் திருப்தி அடைகிறேன். எனது பதவிக் காலத்தில் பிலிபித்தின் வளர்ச்சிக்காக கடுமையாக உழைத்துள்ளேன். ஆனால்,எனக்கு இந்த முறை அதிர்ஷ்டம் இல்லை.

பிரதமர் மோடியுடன் மேனகா காந்தி
பிரதமர் மோடியுடன் மேனகா காந்தி

தேர்தல் அரசியலுக்கு வந்த பிறகு, சாமானிய மக்களின் குரலாக செயல்பட்டேன். ஒட்டுமொத்த துறையின் செழுமைக்காக கடுமையாக உழைத்தேன். பல்லாயிரக்கணக்கான திட்டங்களை செயல்படுத்தினேன். ஆனால், இனி நான் உங்களோடு எம்.பியாக இருக்க மாட்டேன். ஆனால், நான் கடைசி வரை உங்கள் மகனாக இருப்பேன். உங்களுக்காக என் வீட்டின் கதவுகள் எப்போதும் திறந்தே இருக்கும். இப்போது நான் உங்கள் ஆசீர்வாதத்தை மட்டுமே கேட்கிறேன்" என்று அதில் எழுதியுள்ளார்.

வருண் காந்திக்கு மக்களவைத் தேர்தலில் இந்த முறை போட்டியிட வாய்ப்பு அளிக்காத பாஜக, மேனகா காந்திக்கு சுல்தான்பூரில் போட்டியிட வாய்ப்பு வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் வாசிக்கலாமே...  

அதிர்ச்சி... போதையில் விமானம் ஓட்டும் பைலட்கள்... 6 மாதங்களில் 33 பைலட்கள் உட்பட130 பேருக்கு தண்டனை!

கூட்டமும் சேரவில்லை; கூட்டணியிலும் ஒற்றுமையில்லை... தேர்தல் பிரச்சாரத்தை பாதியில் நிறுத்திய ராதிகா!

இப்படியெல்லாமா விளையாடுறது?... குடல் வெடித்து வாலிபர் சாவு!

இப்படி ஆயிடுச்சே.. ராமநாதபுரத்தில் சுயேட்சையாக போட்டியிடும் ஓபிஎஸ்... 5 ஓபிஎஸ்-களின் வேட்பு மனுக்கள் ஏற்பு!

’பப்’பில் நைட் பார்ட்டி... ஸ்ருதிஹாசனுடன் செம ரொமான்ஸில் லோகேஷ்?! கதறும் கோலிவுட்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in