எம்.பி., சீட் தராததால் கணேசமூர்த்தி தற்கொலையா?! வைகோ பரபரப்பு பேட்டி!

கோவை விமான நிலையத்தில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ பேட்டி
கோவை விமான நிலையத்தில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ பேட்டி

எம்பி சீட் கிடைக்காததால் ஈரோடு எம்.பி., கணேசமூர்த்தி தற்கொலை என்ற செய்தியை ஒரு சதவிகிதம் கூட நான் நம்ப மாட்டேன் என கோவையில் வைகோ கண்ணீர் மல்க பேட்டியளித்துள்ளார்.

மதிமுகவின் பொருளாளராக பதவி வகித்து வந்த கணேசமூர்த்தி, கடந்த மக்களவைத் தேர்தலில் திமுகவின் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். நடப்பு மக்களவைத் தேர்தலில் மதிமுகவிற்கு திருச்சி தொகுதி ஒதுக்கப்பட்டதால், அவருக்கு சீட் வழங்கப்படவில்லை. இந்நிலையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை, கணேசமூர்த்தி தற்கொலைக்கு முயன்றதாக கூறப்படுகிறது. இதனால் உடல்நிலை பாதிக்கப்பட்ட அவர் கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் இன்று காலை அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இதையடுத்து, அவரது உடல், பிரேத பரிசோதனைக்காக பெருந்துறை இ.எஸ்.ஐ மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. ஈரோடு எம்.பி கணேசமூர்த்தி மறைவிற்கு செல்ல, கோவை வந்த மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, கோவை விமான நிலையத்தில் பேட்டியளித்தார்.

அப்போது பேசிய அவர், “திமுக உறுப்பினராக வேண்டாவெறுப்பில் சேர்ந்து, மக்களவை உறுப்பினரானார் கணேசமூர்த்தி. இப்போது திமுக உறுப்பினராக இருந்து கொண்டு வேறு பொறுப்பிற்கு வரமுடியாது என்று கூறியவர் அவர். சட்டமன்ற தேர்தலில் உரிய இடம் கொடுக்கப்படும் என அவரிடம் தெரிவிக்கப்பட்டு இருந்தது. அப்போது இரு சீட் கொடுத்தால் பரிசீலனை செய்யுங்கள் என்று என்னிடம் கூறி இருந்தார். ஒன்று மட்டும் கொடுத்தால் துரை நிற்கட்டும் என்று சொல்லி இருந்தார். தேர்தல் முடிந்த பின்பும் இருவரும் வீடுகளுக்கு சென்று வந்திருக்கின்றோம். உயிருக்கு உயிராக 50 ஆண்டாக பழகி இருக்கின்றோம் நானும் கணேசமூர்த்தியும்” என்றார்.

கோவை விமான நிலையத்தில் நிர்வாகிகளுடன் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ
கோவை விமான நிலையத்தில் நிர்வாகிகளுடன் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ

மேலும், “கொள்கையும், லட்சியமும் பெரிது என வாழ்ந்தவர் கணேசமூர்த்தி. ஆனால் சில நாட்களாகவே மிகவும் மன அழுத்தத்தில் இருப்பதாக என்னிடம் ஈரோடு மாவட்ட கட்சி நிர்வாகிகள் சொன்னார்கள். இன்னும் பல ஆண்டுகள் வாழ்ந்து இருக்க வேண்டியவர். இந்த முடிவிற்கு வருவார் என நான் கனவிலும் நினைக்கவில்லை. பெரிய இடி தலையில் விழுந்ததை போல இருக்கின்றது. அவர் இறந்து விட்டார் என்ற செய்தியை விட, மருந்து குடித்து விட்டார் என்ற செய்தியே எனக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது” என்று கூறி கண்ணீர் விட்டு நா தழுதழுக்க அழுதார்.

தொடர்ந்து பேசிய அவர், “மருத்து குடித்து விட்டார் என்ற போதே எனக்கு உயிர் போய்விட்டது. எம்.பி சீட் கிடைக்காததால் இறந்தார் என்பது உண்மையல்ல. பலர் அவ்வாறு கூறிவருகின்றனர். இதனை நான் ஒரு சதவிகிதம் கூட ஏற்க மாட்டேன்” என்று வைகோ தெரிவித்தார்

இதையும் வாசிக்கலாமே...  

இன்று பரிசீலனை.. தமிழகத்தில் 39 தொகுதிகளில் 1,403 பேர் வேட்புமனு தாக்கல்!

கை சின்னத்துக்கு வாக்களியுங்கள்; பழசை மறக்காத ஜி.கே.வாசன்... பம்பரத்துக்கு ஓட்டு கேட்ட சி.வி.சண்முகம்!

முதல்ல எல்லா பூத்களுக்கும் ஏஜென்ட் போடமுடியுதானு பாருங்க?... பாஜகவை பங்கம் செய்த வேலுமணி!

அக்காவை தோற்கடித்து, தம்பியை வெற்றி பெற வைக்க வேண்டும்... அமைச்சர் பன்னீர்செல்வத்துக்கு இப்படி ஒரு வேலை!

தேறுவாரா திருமா... சிதம்பரம் தொகுதி நிலவரம்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in