நீலகிரியை வட்டமடிக்கும் அமைச்சர் எல்.முருகன்; மக்களவைத் தேர்தலில் களமிறங்க திட்டம்?

தெப்பக்காடு யானைகள் முகாமில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன்
தெப்பக்காடு யானைகள் முகாமில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன்

நேற்று தெப்பக்காடு யானைகள் முகாமிற்கு நேரில் சென்ற மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் ஆஸ்கர் புகழ் பொம்மன் பெள்ளி தம்பதிகளை நேரில் சந்தித்து வாழ்த்துக்களை தெரிவித்தார்.

ஆஸ்கர் விருது வென்ற ஆவணப்படமான ’எலிபன்ட் விஸ்பரர்ஸ்’ படத்தில் நடித்த பொம்மன் பெள்ளி தம்பதிக்கு தொடர்ந்து பாராட்டுக்கள் குவிந்து வருகிறது. ஏற்கெனவே தெப்பக்காடு யானைகள் முகாமிற்கு நேரடியாக வந்த பிரதமர் நரேந்திர மோடி, இந்தத் தம்பதியைச் சந்தித்து வாழ்த்துத் தெரிவித்தார்.

இதைத் தொடர்ந்து குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவும் நேரில் வந்து இருவருக்கும் வாழ்த்து தெரிவித்தார். தமிழ்நாடு அரசு சார்பில் இருவருக்கும் அரசு வேலை வழங்கி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார்.

தெப்பக்காடு யானைகள் முகாமில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன்
தெப்பக்காடு யானைகள் முகாமில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன்

இந்த நிலையில், நீலகிரி மாவட்டத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரும் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் நேற்று தெப்பக்காடு யானைகள் முகாமிற்கு சென்றார். அப்போது பொம்மன் பெள்ளி தம்பதியைச் சந்தித்த அவர், அவர்களுக்கு பொன்னாடை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார்.

இதைத்தொடர்ந்து அவர்களது நலம் மற்றும் வாழ்க்கை முறை குறித்து விசாரித்த அவர், தெப்பக்காடு யானைகள் முகாமில் உள்ள யானைகளை பார்வையிட்டார். தொடர்ந்து யானைகளுக்கு கரும்புகள் கொடுத்து மகிழ்ந்தார்.

தெப்பக்காடு யானைகள் முகாமில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன்
தெப்பக்காடு யானைகள் முகாமில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன்

விரைவில் மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், நீலகிரி தொகுதியில் திமுகவின் ஆ.ராசாவை எதிர்த்து பாஜக சார்பில் போட்டியிட எல்.முருகன் வியூகம் வகுத்திருப்பதாக அரசியல் வட்டாரத்தில் தகவல் பரவி வருகிறது. இந்நிலையில், நீலகிரியில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் எல்.முருகன் அடிக்கடி பங்கெடுத்து வருவது அதை உறுதிப்படுத்தும் விதமாக அமைந்திருக்கிறது.

இதையும் வாசிக்கலாமே...

பகீர்... 250 பாலஸ்தீன குழந்தைகள் மரணம்!

பிறந்து 72 நாட்களில் 31 வகையான சான்றிதழ்கள்... உலக சாதனை படைத்த குழந்தை

க்ளாமர் லுக்கில் கெத்து காட்டும் நயன்தாரா!

இடது பக்கம் அண்ணாமலை... நடுவில் முதல்வர் விஜய்யாம்... வலது பக்கம் டிடிவி; ரசிகர்களின் அட்ராசிட்டி போஸ்டர்

மாணவர்களுக்கு சப்ளை... உல்லாச வாழ்க்கை; 3,750 போதை மாத்திரைகளுடன் 4 இளைஞர்கள் கைது

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in