மத்திய அரசுக்கு ரூ.28 கோடி அபராதம் நிலுவை... டிடிவி.தினகரனின் சொத்துமதிப்பு இவ்வளவுதானா? முழு விவரங்கள்!

மத்திய அரசுக்கு ரூ.28 கோடி அபராதம் நிலுவை... டிடிவி.தினகரனின் சொத்துமதிப்பு இவ்வளவுதானா? முழு விவரங்கள்!

பாஜக கூட்டணியில் இடம்பெற்றுள்ள அமமுக பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன் தேனி மக்களவைத் தொகுதியில் போட்டியிடுகிறார். நேற்று அவர் வேட்புமனுத்தாக்கல் செய்த நிலையில் அவரின் சொத்து விவரங்கள் வெளியாகியுள்ளது.

எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக அமமுகவை தொடங்கிய டிடிவி.தினகரன் கடந்த மக்களவை, சட்டப்பேரவை தேர்தல்களில் தனி அணி அமைத்து களம் கண்டார். இம்முறை பாஜக கூட்டணியில் இடம்பிடித்து தேனி, திருச்சி தொகுதிகளில் அமமுக போட்டியிடுகிறது. இந்த நிலையில், தேனி மக்களவைத் தொகுதி வேட்பாளரான டிடிவி.தினகரன் நேற்று தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார். அவரது வேட்புமனுவின் பிரமாண பத்திரத்தில் குறிப்பிடப்பட்டுள்ள சொத்து விவரங்கள் தற்போது வெளியாகியுள்ளது.

அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன்
அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன்

அதன்படி, “ டிடிவி தினகரன் தனக்கு ரூ.19,82,973 மதிப்பில் அசையும் சொத்துகள் உள்ளதாகவும், ரூ.57,44,008 மதிப்பில் அசையா சொத்துகள் உள்ளதாகவும் தெரிவித்துள்ளார். ஒட்டுமொத்தமாக தனது சொத்து மதிப்பு ரூ.77, 26,981 என்று டிடிவி தினகரன் கூறியுள்ளார். மேலும் தனக்கு ரூ.9,25,029 மதிப்பில் கடன் உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். அத்துடன், அயல்நாட்டு பணப் பரிமாற்ற ஒழுங்குமுறைச் சட்டத்தின் கீழ் விதிக்கப்பட்ட ரூ.28 கோடி அபராத தொகையை மத்திய அரசுக்கு செலுத்தாமல் நிலுவையில் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும், தன்னிடம் கை இருப்பு 54,825 ரூபாய் மட்டுமே உள்ளதாகவும், ஆண்டு வருமானம் ரூ.6 லட்சத்து 87 ஆயிரத்து 870 ரூபாய். (கடந்த 2012 - 2023 வருமான வரித்துறைக்கு தாக்கல் செய்த கணக்கு) என்றும், சொந்தமாக கார் இல்லை. குற்ற வழக்குகள் 6, இதர வழக்குகள் 3. எந்த வழக்கிலும் தண்டனை இல்லை” என்றும் தெரிவித்துள்ளார்.

டிடிவி.தினகரனின் மனைவி அனுராதா பெயரில் ரூ.1,69,25,118 மதிப்பில் அசையும் சொத்துகள், ரூ.2,48,79,707 மதிப்பில் அசையா சொத்துகள் உள்ளதாகவும் அவரின் வேட்புமனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. டிடிவி தினகரனின் மனைவி அனுராதாவின் கையிருப்பு தொகை ரூ.21,804 எனவும், ஆண்டு வருமானம் ரூ.25,21,020 எனவும், தங்கம் 1,024 கிராம் உள்ளதாகவும், வைரம் 37.32 கிராம் உள்ளதாகவும், ரூ.8,96,323 மதிப்பு கொண்ட ஸ்கார்பியோ வைத்திருப்பதாகவும், வங்கி உள்ளிட்ட இதர நிறுவனங்களில் உள்ள கடன் ரூ 22,87,960 என்றும் பிரமாண பத்திரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதையும் வாசிக்கலாமே...  

இன்று பரிசீலனை.. தமிழகத்தில் 39 தொகுதிகளில் 1,403 பேர் வேட்புமனு தாக்கல்!

கை சின்னத்துக்கு வாக்களியுங்கள்; பழசை மறக்காத ஜி.கே.வாசன்... பம்பரத்துக்கு ஓட்டு கேட்ட சி.வி.சண்முகம்!

முதல்ல எல்லா பூத்களுக்கும் ஏஜென்ட் போடமுடியுதானு பாருங்க?... பாஜகவை பங்கம் செய்த வேலுமணி!

அக்காவை தோற்கடித்து, தம்பியை வெற்றி பெற வைக்க வேண்டும்... அமைச்சர் பன்னீர்செல்வத்துக்கு இப்படி ஒரு வேலை!

தேறுவாரா திருமா... சிதம்பரம் தொகுதி நிலவரம்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in