தேர்தலில் இருந்து விலகிய பாஜக வேட்பாளர்: தெலங்கானாவில் பரபரப்பு!

பாஜக கொடிகள்
பாஜக கொடிகள்

தெலங்கானா மாநிலம் சந்திராயன் குட்டா பாஜக வேட்பாளர் சத்யநாராயணா முதிராஜ் தேர்தலில் இருந்து விலகியுள்ளது அக்கட்சியினருக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தெலங்கானா மாநிலத்தில் பிஆர்எஸ் கட்சியைச் சேர்ந்த சந்திரசேகர ராவ் ஆட்சி செய்து வருகிறார். தெலங்கானாவில் 119 சட்டப்பேரவைத் தொகுதிகள் உள்ளன. இங்கு வரும் 30-ம் தேதி ஒரே கட்டமாக சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறுகிறது. வாக்கு எண்ணிக்கை டிச.3-ம் தேதி நடைபெறுகிறது. ஆளுங்கட்சியான பிஆர்எஸ்சுக்கும், காங்கிரசுக்கும் கடும் போட்டி நிலவி வருகிறது.

இந்த நிலையில், பாஜகவின் வேட்பாளர் திடீரென போட்டியில் இருந்து விலகியுள்ளது அக்கட்சியினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சந்திராயன் குட்டாவில் பாஜக சார்பில் சத்யநாராயணா முதிராஜ் போட்டியிடுவார் என கட்சி தலைமை அறிவித்திருந்தது. அவரும் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார்.

இந்த நிலையில், அவர் தெலங்கானா சட்டப்பேரவைத் தேர்தலில் இருந்து விலகுவதாக பாஜக தலைமைக்கு கடிதம் எழுதியுள்ளார். சில உடல்நலப் பிரச்சினைகளால் அவர் போட்டியில் இருந்து விலகியுள்ளதாக கூறப்படுகிறது.

சந்திராயன் குட்டா தொகுதியில் ஏஐஎம்ஐஎம் கட்சி வலுவாக உள்ளது. இக்கட்சியின் சார்பில் அக்பரூதீன் ஓவைசி 2014, 2018 ஆகிய தேர்தல்களில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார். 2018-ல் அவர் பாஜக வேட்பாளரை 80,263 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in