அமிதாப்- ராஷ்மிகா
அமிதாப்- ராஷ்மிகா

நடிகை ராஷ்மிகாவை மோசமாக சித்தரித்து வீடியோ... கொந்தளித்த அமிதாப் பச்சன்!

Published on

டீப் ஃபேக் டெக்னாலஜி மூலம் நடிகை ராஷ்மிகாவை தவறாக சித்தரிக்கும் வீடியோ ஒன்று வெளியாகியுள்ளதற்கு நடிகர் அமிதாப் பச்சன் கொந்தளித்துள்ளார்.

தமிழ், தெலுங்கில் முன்னணியில் இருக்கும் நடிகை ராஷ்மிகா மந்தனா தற்போது பாலிவுட்டிலும் அதிக கவனம் செலுத்தி வருகிறார். அமிதாப்புடன் ‘குட்பை’ என்ற படம் மூலம் பாலிவுட்டில் அறிமுகமானவர் அடுத்து ‘மிஷன் மஞ்சு’ என்ற படத்திலும் நடித்தார். இப்போது ரன்பீருடன் நடித்திருக்கும் ‘அனிமல்’ படம் வெளியீட்டிற்குத் தயாராக உள்ளது. இந்த நிலையில், டீப் ஃபேக் டெக்னாலஜி மூலமாக ராஷ்மிகாவை தவறாக சித்தரிக்கும் வகையிலான வீடியோ ஒன்று இணையத்தில் டிரெண்டாகி வருகிறது.

உண்மையில் அந்த வீடியோவில் இருப்பவர் ஜாரா படேல் என்ற பிரிட்டிஷ் வாழ் இந்தியப் பெண். இவரது வீடியோவைத் தான் ராஷ்மிகா மந்தனா போல இப்படி டீப் பேக் முறையில் எடிட் செய்துள்ளனர். இப்படி தவறாக பிரபலங்களைச் சித்தரிப்பவர்களையும் இது போன்ற டெக்னாலஜியை தவறாக பயன்படுத்துவதையும் தடுக்க நடவடிக்கை வேண்டும் என பலரும் குரல் எழுப்பி வருகின்றனர்.

ராஷ்மிகாவை தவறாக சித்தரிக்கும் வீடியோவையும் உண்மையான வீடியோவையும் பகிர்ந்திருக்கும் அமிதாப் பச்சன், ‘இதற்கு கடுமையான சட்ட நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்’ என ராஷ்மிகாவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளார். மேலும், எடிட் செய்த அந்த வீடியோவில் லிஃப்ட்டிற்குள் நுழையும்போது ஜாரா படேல் முகம் என்பது தெளிவாகத் தெரியும். அதன் பிறகு ராஷ்மிகாவின் முகம் எடிட் செய்யப்பட்டுள்ளது என பலரும் தெரிவித்து வருகின்றனர்.

x
காமதேனு
kamadenu.hindutamil.in