புது வாக்காளர்களாக 4 லட்சம் பேர் விண்ணப்பம்! தேர்தல் ஆணையம் தகவல்

வாக்காளர் பட்டியல் திருத்த சிறப்பு முகாம்கள்
வாக்காளர் பட்டியல் திருத்த சிறப்பு முகாம்கள்
Updated on
2 min read

தமிழ்நாடு முழுவதும் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க மற்றும் திருத்தங்கள் மேற்கொள்ள 6 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

நாடாளுமன்ற தேர்தல் 2024ம் ஆண்டு நடைபெற உள்ள நிலையில், வாக்காளர் பட்டியலை இறுதி செய்யும் பணியில் தேர்தல் ஆணையம் தீவிரமாக ஈடுபட்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக, வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கை மற்றும் நீக்கம் ஆகியவற்றிற்காக சிறப்பு முகாம்கள் 4,5 மற்றும் 18, 19 ஆகிய தேதிகளில் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது.

இதன்படி கடந்த சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் தமிழ்நாடு முழுவதும் சுமார் 68 ஆயிரம் வாக்குச்சாவடிகளில் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டன.

6 லட்சம் பேர் விண்ணப்பம்
6 லட்சம் பேர் விண்ணப்பம்

இந்த சிறப்பு முகாம்களில் பெயர் சேர்க்கை, பெயர் மாற்றம், முகவரி மாற்றம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து பொதுமக்கள் மனுக்களை அளித்தனர். ஆதார் அட்டை, வங்கி பாஸ்புக், கடவுச்சீட்டு உள்ளிட்ட ஆவணங்களை காட்டி திருத்தங்கள் மேற்கொள்ளலாம் மற்றும் பெயர்களை சேர்த்துக் கொள்ளலாம் என தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. இதையடுத்து தமிழ்நாடு முழுவதும் ஏராளமானோர் ஆர்வத்துடன் இந்த முகாம்களில் கலந்து கொண்டனர்.

புதிதாக பெயர் சேர்க்க 4 லட்சம் பேர் விண்ணப்பம்
புதிதாக பெயர் சேர்க்க 4 லட்சம் பேர் விண்ணப்பம்

இதனிடையே இந்த முகாம்களில் 6 லட்சம் பேர் விண்ணப்பங்களை வழங்கி உள்ளதாக, தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இதில் 4 லட்சம் பேர் புதிதாக வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க விண்ணப்பித்துள்ளதாக, தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

இதையும் வாசிக்கலாமே...

HBD AMBIKA| ‘முதல் மரியாதை’ மீது அம்பிகாவுக்கு வந்த பொறாமை!

தீபாவளி கொண்டாட்டம்... 16,895 பேருந்துகள் இயக்கம்... எந்தெந்த ஊர்களுக்கு எங்கிருந்து? முழு விபரம்!

அதிர்ச்சி... பெண் அதிகாரி கழுத்தறுத்து கொலை! மர்ம கும்பல் வெறிச்செயல்

பிரபல ரவுடி வீட்டின் மீது நாட்டு வெடிகுண்டு வீச்சு! உயிர் தப்பிய குடும்பம்

அமைச்சர் எ.வ.வேலு வீட்டில் 4வது நாளாக தொடரும் ஐடி ரெய்டு!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in