வைகோவின் வாரிசு அரசியலால் மதிமுக எம்.பி கணேசமூர்த்தி படுகொலை... தமிழிசை பகீர் குற்றச்சாட்டு!

கணேசமூர்த்தி - வைகோ
கணேசமூர்த்தி - வைகோ

"வாரிசு அரசியலால் ஈரோடு மதிமுக எம்பி கணேசமூர்த்தி படுகொலை செய்யப்பட்டுள்ளார். இந்த இறப்புக்கு வைகோ, ஸ்டாலின் பதில் சொல்லியே ஆக வேண்டும்" என்று, தென்சென்னை பாஜக வேட்பாளர் தமிழசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

ஈரோடு மக்களவைத் தொகுதி உறுப்பினர் கணேசமூர்த்தி உடல்நலக்குறைவு காரணமாக தனியார் மருத்துவமனையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில், மாரடைப்பு காரணமாக இன்று அவர் காலமானார். அவரது உடலுக்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ உட்பட பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் நேரில் அஞ்சலி செலுத்தினர். மேலும் தங்களது ஆழ்ந்த இரங்கல்களையும் தெரிவித்து வருகின்றனர்.

துரை வைகோ
துரை வைகோ

மக்களவைத் தேர்தலில் ஈரோடு தொகுதியில் மீண்டும் போட்டியிட கணேசமூர்த்தி விருப்பப்பட்டதாக கூறப்படுகிறது. ஆனால், திமுக கூட்டணியில் மதிமுகவிற்கு ஒதுக்கப்பட்ட ஒரே தொகுதியான திருச்சியில் துரை வைகோவிற்கு வாய்ப்பு அளிக்கப்பட்டதால், கணேசமூர்த்தி மிகுந்த மன உளைச்சலில் இருந்ததாகவும், இதனால் அவர் விஷ மாத்திரைகளை சாப்பிட்டு தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதாகவும் எதிர்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன.

முக்கியமாக, வைகோ தனது மகன் துரை வைகோவின் அரசியல் எதிர்காலத்திற்காக கணேசமூர்த்தியை பலிகடா ஆக்கிவிட்டார் என்று கடுமையாக விமர்சிக்கப்பட்டு வருகிறது.

தமிழிசை சவுந்தரராஜன்
தமிழிசை சவுந்தரராஜன்

இதுதொடர்பாக பாஜக தென்சென்னை வேட்பாளர் தமிழிசை சவுந்தரராஜன் கூறுகையில், "வாரிசு அரசியல் ஜனநாயகத்தை படுகொலை செய்துவிடும் என்று பிரதமர் மோடி பேசி வருகிறார். அதுபோன்ற நிகழ்வு, எம்.பி- கணேசமூர்த்தி விஷயத்தில் நடந்துள்ளது. வைகோவின் வாரிசு அரசியலால் மதிமுக எம்.பி. கணேசமூர்த்தி படுகொலை செய்யப்பட்டுள்ளார். குடும்ப அரசியல், வாரிசு அரசியல் காரணங்களால் கணேசமூர்த்தி இறப்பு நடந்துள்ளது. இதற்கு வைகோவும், முதல்வர் ஸ்டாலினும் பதில் சொல்லியே ஆக வேண்டும்.

திமுகவில் ஸ்டாலினுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுவதாக குற்றம்சாட்டி தான் திமுகவில் இருந்து வைகோ வெளியே வந்தார். தற்போது அனுபவம் வாய்ந்த ஒரு எம்பி-க்கு சீட் கொடுக்காமல் தனது மகனுக்கு சீட் வாங்கி கொடுத்து படுகொலை செய்திருக்கிறார் வைகோ. தேர்தலில் சீட் கிடைக்கவில்லை என்று ஒரு எம்.பி- தற்கொலை செய்து கொண்டது தமிழகத்தில் தான் நடந்துள்ளது. இது மன்னிக்க முடியாத குற்றம். இதுதான் வாரிசு அரசியலின் அபாயகரம்" என்று தெரிவித்துள்ளார்.

இதையும் வாசிக்கலாமே...  

அதிர்ச்சி... போதையில் விமானம் ஓட்டும் பைலட்கள்... 6 மாதங்களில் 33 பைலட்கள் உட்பட130 பேருக்கு தண்டனை!

கூட்டமும் சேரவில்லை; கூட்டணியிலும் ஒற்றுமையில்லை... தேர்தல் பிரச்சாரத்தை பாதியில் நிறுத்திய ராதிகா!

இப்படியெல்லாமா விளையாடுறது?... குடல் வெடித்து வாலிபர் சாவு!

இப்படி ஆயிடுச்சே.. ராமநாதபுரத்தில் சுயேட்சையாக போட்டியிடும் ஓபிஎஸ்... 5 ஓபிஎஸ்-களின் வேட்பு மனுக்கள் ஏற்பு!

’பப்’பில் நைட் பார்ட்டி... ஸ்ருதிஹாசனுடன் செம ரொமான்ஸில் லோகேஷ்?! கதறும் கோலிவுட்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in