பசும்பொன் தேவர் நினைவிடத்தில் 1.5 கோடியில் மேற்கூரை- தமிழக அரசு

பசும்பொன் தேவர் நினைவிடம்
பசும்பொன் தேவர் நினைவிடம்

பசும்பொன் தேவர் நினைவாலயம் முன்பு பொதுமக்கள் பயன்பெறும் வகையில் அரசு சார்பில் ரூ.1½ கோடியில் மேற்கூரை அமைக்கப்படும் என அமைச்சர் வெள்ளகோவில் சாமிநாதன் கூறினார்.

பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் 116-வது ஜெயந்தி விழா மற்றும் 61-வது குருபூஜை விழா கமுதி அருகே உள்ள பசும்பொன் முத்துராமலிங்க தேவர் நினைவாலயத்தில் இம்மாதம்  30-ம் தேதி நடைபெற உள்ளது. இதில் ஏராளமான அரசியல் கட்சித் தலைவர்கள் மற்றும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் வந்து மரியாதை செலுத்துவர். 

அப்போது அஞ்சலி செலுத்த வரும் பொதுமக்கள் மற்றும் பல்வேறு வகையில் நேர்த்திக்கடன் செலுத்துகிறவர்கள் உட்பட அனைவரும் மழை மற்றும் வெயிலால் பாதிக்கப்படுகிறார்கள். இதனால் அங்கே மேற்கூரை அமைத்துத் தர வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் அரசுக்கு கோரிக்கை விடுத்திருந்தனர். 

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ராஜ கண்ணப்பன் உள்ளிட்டோரும் இதுகுறித்து கோரிக்கை வைத்திருந்தனர். இந்த நிலையில் நேற்று பசும்பொன் முத்துராமலிங்க தேவர் நினைவாலயத்தை தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் வெள்ளகோவில் சாமிநாதன் நேரில் ஆய்வு செய்தார்.

நினைவிடத்தில் உள்ள தேவர் சிலைக்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார். பின்னர் அவரது இல்லம் மற்றும் புகைப்பட கண்காட்சியை பார்வையிட்டார். 

அமைச்சர் வெள்ளகோவில் சாமிநாதன்
அமைச்சர் வெள்ளகோவில் சாமிநாதன்

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், 'இது குறித்து பொதுமக்கள் மற்றும் பல்வேறு தரப்பினர் தமிழக முதல்வரிடம் கோரிக்கை வைத்திருந்தனர். அதனையேற்று பொதுமக்கள் பயன்பெறும் வகையில் தமிழக அரசின் சார்பில் தேவர் நினைவிடத்திற்கு எதிரில் ஒன்றரை கோடி ரூபாய் மதிப்பீட்டில் நிரந்தரமாக மேற்கூரை அமைத்து தரப்படும் என்று கூறினார்.

முன்னதாக அமைச்சரை தேவர் நினைவாலய பொறுப்பாளர் காந்திமீனாள் நடராஜன், பழனி, குமார், தங்கவேல் உள்பட பொறுப்பாளர்கள் பொன்னாடை போர்த்தி வரவேற்றனர்.

இதையும் வாசிக்கலாமே...

மறக்காதீங்க... வங்கிகளில் ரூ.2000 மாற்ற நாளை கடைசி நாள்!

ஆர்பிஐ அதிரடி அறிவிப்பு; வங்கி வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சி

40 தொகுதிகளிலும் தனித்து போட்டி... திமுகவுக்கு எதிராக களமிறங்கும் ஆசிரியர்கள் சங்கம்!

அரியாசனம் காத்திருக்கு வா தலைவா... பரபரப்பை கிளப்பிய விஜய் ரசிகர்கள்!

சக வீரர்கள் மீது திடீரென துப்பாக்கிச்சூடு நடத்திய ராணுவ அதிகாரி - ஜம்மு காஷ்மீரில் பதற்றம்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in