டிடிவி.தினகரனின் வேட்புமனு பரிசீலனை நிறுத்திவைப்பு... தேனியில் பரபரப்பு!

டிடிவி தினகரன்
டிடிவி தினகரன்

பாஜக கூட்டணியில் இடம்பெற்றுள்ள அமமுக பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன் தேனி மக்களவைத் தொகுதியில் போட்டியிடுகிறார். தினகரனின் வேட்புமனு பரிசீலனை தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளது

எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக அமமுகவை தொடங்கிய டிடிவி.தினகரன் கடந்த மக்களவை, சட்டப்பேரவை தேர்தல்களில் தனி அணி அமைத்து களம் கண்டார். இம்முறை பாஜக கூட்டணியில் இடம்பிடித்து தேனி, திருச்சி தொகுதிகளில் அமமுக போட்டியிடுகிறது.

தினகரன் வேட்புமனு
தினகரன் வேட்புமனு

இந்த நிலையில், தேனி மக்களவைத் தொகுதி வேட்பாளரான டிடிவி.தினகரன் நேற்று தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார். அவருடன் தேனி தொகுதியின் சிட்டிங் எம்.பியான ஓ. ரவீந்திரநாத் வந்திருந்தார். இந்த நிலையில் இன்று தமிழகம் முழுவதும் வேட்புமனுக்கள் பரிசீலனை செய்யப்பட்டு வருகிறது.

இதில் தேர்தல் விதிமுறைகளை மீறி பிரச்சார வாகனத்தில் வந்து டிடிவி. தினகரன் வேட்புமனு செய்ததாகவும், மேலும் தினகரனின் வழக்கு விவரங்கள் குறித்து வேட்புமனுவில் தெளிவாக குறிப்பிடப்படவில்லை எனவும் குற்றம்சாட்டி டிடிவி.தினகரனின் மனுவை பரிசீலனை செய்யக்கூடாது என திமுக, அதிமுக, நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் தரப்பில் கடுமையான எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வருகிறது.

தினகரன்
தினகரன்

இதன் காரணமாக தேனியில் டிடிவி.தினகரனின் வேட்புமனு பரிசீலனை தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. இதனால் தேனி ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பான சூழல் ஏற்பட்டுள்ளது.

இதையும் வாசிக்கலாமே...  

இன்று பரிசீலனை.. தமிழகத்தில் 39 தொகுதிகளில் 1,403 பேர் வேட்புமனு தாக்கல்!

கை சின்னத்துக்கு வாக்களியுங்கள்; பழசை மறக்காத ஜி.கே.வாசன்... பம்பரத்துக்கு ஓட்டு கேட்ட சி.வி.சண்முகம்!

முதல்ல எல்லா பூத்களுக்கும் ஏஜென்ட் போடமுடியுதானு பாருங்க?... பாஜகவை பங்கம் செய்த வேலுமணி!

அக்காவை தோற்கடித்து, தம்பியை வெற்றி பெற வைக்க வேண்டும்... அமைச்சர் பன்னீர்செல்வத்துக்கு இப்படி ஒரு வேலை!

தேறுவாரா திருமா... சிதம்பரம் தொகுதி நிலவரம்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in