என் ஒருவனை எதிர்க்க இத்தனை பேர் கூட்டணி சேர்ந்துள்ளனர்... எதிர்க்கட்சிகளை விளாசிய ஜெகன்மோகன் ரெட்டி!

ஜெகன்மோகன் ரெட்டி
ஜெகன்மோகன் ரெட்டி

என் எதிரிகள் தனித்தனியாக வர துணிவில்லாமல் கூட்டணியுடன் வந்துள்ளன. எனக்கு பொதுமக்கள் மற்றும் கடவுளின் ஆதரவு மட்டுமே உள்ளது என ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் தலைவரும், மாநில முதல்வருமான ஒய்.எஸ்.ஜெகன் மோகன் ரெட்டி தெரிவித்துள்ளார்.

ஜெகன் மோகன் ரெட்டி
ஜெகன் மோகன் ரெட்டி

ஆந்திரப் பிரதேசத்தில் 175 உறுப்பினர்களைக் கொண்ட சட்டமன்றம் மற்றும் 25 மக்களவைத் தொகுதிகளுக்கான தேர்தல் மே 13-ஆம் தேதியும், வாக்கு எண்ணிக்கை ஜூன் 4-ஆம் தேதியும் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் ஆளும் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் தனித்துப் போட்டியிடுகிறது. எதிர்க்கட்சியான தெலுங்கு தேசம், பாஜக மற்றும் பவன் கல்யாண் கட்சியுடன் இணைந்து போட்டியிடுகிறது. காங்கிரஸ் கட்சி சிபிஎம் மற்றும் சிபிஐ கட்சிகளுடன் இணைந்து தேர்தலை சந்திக்கிறது.

இந்த தேர்தலுக்கான வேட்பாளர் பட்டியலை ஏற்கெனவே வெளியிட்ட ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் தலைவரும், மாநில முதல்வருமான ஜெகன்மோகன் ரெட்டி பிரச்சாரத்தில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். தேர்தல் பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக கடப்பா மாவட்டத்தில் உள்ள புரோட்டத்தூரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய ஜெகன்மோகன், “ என் ஒருவனை எதிர்க்க இப்போது பலரும் கூட்டணி சேர்ந்துள்ளனர். தெலுங்கு தேசம் கட்சியும், ஜனசேனாவும் மத்தியிலிருந்து பாஜகவை கொண்டு வந்தன. மேலும் காங்கிரஸ் கட்சியும் என்னை எதிர்க்க வந்துள்ளது. இது எல்லாம் போதாது என்று என் இரண்டு சகோதரிகளையும் அழைத்து வந்துள்ளார்கள். அவர்கள் அனைவரும் ஜெகன் என்னும் ஒரு மனிதனுக்கு எதிரான போரில் ஒன்றுபட்டுள்ளனர்" என்று கூறினார்.

ஜெகன்மோகன் ரெட்டி
ஜெகன்மோகன் ரெட்டி

ஆந்திரப் பிரதேச காங்கிரஸ் கமிட்டி தலைவராக இருக்கும் தனது தங்கை ஒய்.எஸ். ஷர்மிளா மற்றும் தனது சித்தப்பா ஒய்.எஸ். விவேகானந்த ரெட்டியின் கொலை வழக்கு குறித்த பிரச்சாரத்தை முன்னெடுத்து வரும் அவரது உறவினர் சுனிதா நரெட்டி ஆகியோர் தனக்கு எதிராக கொண்டுவரப்பட்டுள்ளனர் என்று அவர் பேசினார்

தொடர்ந்து பேசிய அவர், " தனி மனிதனாக அவர்கள் அனைவரையும் பயமுறுத்தியுள்ளேன். எனவே என் எதிரிகள் தனித்தனியாக வர துணிவில்லாமல் கூட்டணியுடன் வந்துள்ளன. நான் தனியாக இருக்கிறேன். இந்த கட்சிகள் அனைத்தும் எனக்கு எதிராக போராட கூட்டணி வைத்துள்ளன. எனக்கு பொதுமக்கள் மற்றும் கடவுளின் ஆதரவு மட்டுமே உள்ளது. எனவே எதிர்க்கட்சிகளுக்கு "தகுந்த பாடம் கற்பிக்க" வரவிருக்கும் சட்டமன்ற மற்றும் மக்களவைத் தேர்தல்களில் எனக்கு ஆதரவு தரவேண்டும்” என மாநில மக்களை ஜெகன்மோகன்ரெட்டி கேட்டுக் கொண்டார்.

இதையும் வாசிக்கலாமே...  

அதிர்ச்சி... போதையில் விமானம் ஓட்டும் பைலட்கள்... 6 மாதங்களில் 33 பைலட்கள் உட்பட130 பேருக்கு தண்டனை!

கூட்டமும் சேரவில்லை; கூட்டணியிலும் ஒற்றுமையில்லை... தேர்தல் பிரச்சாரத்தை பாதியில் நிறுத்திய ராதிகா!

இப்படியெல்லாமா விளையாடுறது?... குடல் வெடித்து வாலிபர் சாவு!

இப்படி ஆயிடுச்சே.. ராமநாதபுரத்தில் சுயேட்சையாக போட்டியிடும் ஓபிஎஸ்... 5 ஓபிஎஸ்-களின் வேட்பு மனுக்கள் ஏற்பு!

’பப்’பில் நைட் பார்ட்டி... ஸ்ருதிஹாசனுடன் செம ரொமான்ஸில் லோகேஷ்?! கதறும் கோலிவுட்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in