
"நிர்வாண படத்தில் நடித்ததாகக் கூறி சித்ரவதை செய்கின்றனர். னது புகழ், முன்னேற்றத்தைப் பொறுத்துக் கொள்ள முடியாமல் வாய்க்கு வந்தபடி முன்னாள் அமைச்சர் பண்டாரு சத்திய நாராயண மூர்த்தி பேசியிருக்கிறார்" என்ற ஆந்திர மாநில சுற்றுலாத் துறை அமைச்சர் ரோஜா வேதனை தெரிவித்தார்.
திருப்பதியில் நேற்று கண்ணீர் மல்க செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டியில், "நான் நிர்வாண படத்தில் நடித்ததாகக் கூறி சித்ரவதை செய்கின்றனர். சட்டப்பேரவையிலும் சி.டி.க்கள் காட்டப்பட்டன. ஆனால், அதில் இருப்பது நான்தான் என நிரூபிக்கப்படவில்லை. தெலுங்கு தேசம் கட்சி பெண்களை விளையாட்டுப் பொருளாக நடத்துகிறது. எனது புகழ், முன்னேற்றத்தைப் பொறுத்துக் கொள்ள முடியாமல் வாய்க்கு வந்தபடி முன்னாள் அமைச்சர் பண்டாரு சத்திய நாராயண மூர்த்தி பேசியிருக்கிறார். அவரை யாரும் கண்டிக்காதது ஏன்? ஆனால், சட்டம் வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்காது. எனது தனிப்பட்ட வாழ்க்கை குறித்து அவதூறு பேசி, அரசியலை விட்டு அப்புறப்படுத்த வேண்டுமென தெலுங்கு தேசம் கட்சி நினைத்தால், அதற்கான விளைவுகளை சந்திக்க நேரிடும்" என்றார்.
இதற்கிடையில், அமைச்சர் ரோஜா குறித்த சர்ச்சை பேச்சுக்கு, மகளிர் ஆணையம் சார்பில் ஆந்திர மாநில டிஜிபிக்கு புகார் கடிதம் அனுப்பப்பட்டது. அதன்பேரில், முன்னாள் அமைச்சர் பண்டாரு சத்திய நாராயண மூர்த்தி மீது போலீஸார் நேற்று வழக்குப்பதிவு செய்து அவரைக் கைது செய்தனர்.
இதையும் வாசிக்கலாமே...
மனைவியின் டார்ச்சர்… விவாகரத்து பெற்றார் ஷிகர் தவான்!
HBD சோ : எம்.ஜி.ஆர்., கலைஞர், ஜெயலலிதா, ரஜினி... இறுதி வரை ‘கெத்து’ காட்டிய ஆளுமை!
திமுக எம்.பி ஜெகத்ரட்சகன் தொடர்புடைய இடங்களில் வருமானவரித்துறை சோதனை!
அதிர்ச்சி… சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியின் மகள் தற்கொலை!
அதிகாலையில் அதிர்ச்சி... போராட்டம் நடத்திய ஆசிரியர்கள் கைது!