டி.எம். செல்வகணபதி
டி.எம். செல்வகணபதி

சேலத்தில் பரபரப்பு... திமுக வேட்பாளர் செல்வகணபதியின் வேட்பு மனு நிறுத்திவைப்பு!

சேலம் தொகுதி திமுக வேட்பாளர் செல்வகணபதியின் வேட்பு மனுவின் பரிசீலனை எதிர்க்கட்சிகளின் புகாரால் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் உள்ள 39 தொகுதிகளுக்கும், புதுச்சேரி தொகுதிக்கும் ஏப்ரல் 19-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது. அதற்கான வேட்பு மனு தாக்கல் கடந்த 20 ம் தேதி தொடங்கி நேற்றுடன் நிறைவு பெற்றது.

மொத்தம் 1,403 வேட்பாளர்கள் வேட்பு மனுக்களை தாக்கல் செய்திருந்தனர். அதன் பரிசீலனை இன்று நடைபெற்று வருகிறது. திமுக சேலம் தொகுதி மக்களவை வேட்பாளராக முன்னாள் அமைச்சர் டி.எம்.செல்வகணபதி போட்டியிடுகிறார். அவரது வேட்பு மனு  பரிசீலனையின்போது அவருக்கு சேலம் மக்களவைத் தொகுதியில் உள்ள இரண்டு சட்டமன்றத் தொகுதிகளில் வாக்குரிமை இருப்பதாக எதிர்க்கட்சிகள் சார்பில் புகார் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து அது குறித்து அவர் விளக்கம் அளிக்கும் வரை அவரது மனு நிறுத்தி வைக்கப்படுவதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இது திமுக வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதையும் வாசிக்கலாமே...  


இன்று பரிசீலனை.. தமிழகத்தில் 39 தொகுதிகளில் 1,403 பேர் வேட்புமனு தாக்கல்!

கை சின்னத்துக்கு வாக்களியுங்கள்; பழசை மறக்காத ஜி.கே.வாசன்... பம்பரத்துக்கு ஓட்டு கேட்ட சி.வி.சண்முகம்!

முதல்ல எல்லா பூத்களுக்கும் ஏஜென்ட் போடமுடியுதானு பாருங்க?... பாஜகவை பங்கம் செய்த வேலுமணி!

அக்காவை தோற்கடித்து, தம்பியை வெற்றி பெற வைக்க வேண்டும்... அமைச்சர் பன்னீர்செல்வத்துக்கு இப்படி ஒரு வேலை!

தேறுவாரா திருமா... சிதம்பரம் தொகுதி நிலவரம்!

x
காமதேனு
kamadenu.hindutamil.in