இந்தியாவின் பணக்கார பெண்மணி... காங்கிரஸ் கட்சியிலிருந்து பாஜகவுக்கு தாவினார்

சாவித்திரி ஜிண்டால்
சாவித்திரி ஜிண்டால்

இந்தியாவின் கோடீஸ்வரக் குடும்பத்தை சேர்ந்த சாவித்திரி ஜிண்டால், காங்கிரஸ் கட்சியிலிருந்து பாஜகவுக்கு தாவியிருக்கிறார். மகன் நவீன் ஜிண்டாலின் தாவல் நிகழ்ந்த அடுத்த நாளே தாய் சாவித்திரியின் தாவல் நிகழ்ந்திருக்கிறது.

ஜிண்டால் குடும்பம் செல்வத்தில் மட்டுமல்ல அரசியல் செல்வாக்கிலும் பாரம்பரியம் வாய்ந்தது. காங்கிரஸ் கட்சியில் தலைமுறைகள் தாண்டி எம்பி மற்றும் எம்எல்ஏக்களை தந்த குடும்பம் இது. ஹரியாணா மாநிலத்தில் பூபிந்தர் சிங் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் சாவித்திரி ஜிண்டால் அமைச்சராக இருந்திருக்கிறார். முன்னதாக அவரது கணவர் ஓ.பி.ஜிண்டாலும் மாநில அரசின் மின்துறை அமைச்சராக இருந்திருக்கிறார்.

மகன் நவீன் ஜிண்டாலைத் தொடர்ந்து பாஜகவில் இணைந்த சாவித்திரி ஜிண்டால்
மகன் நவீன் ஜிண்டாலைத் தொடர்ந்து பாஜகவில் இணைந்த சாவித்திரி ஜிண்டால்

ஹெலிகாப்டர் விபத்தில் ஓ.பி.ஜிண்டால் பலியான பிறகு மகன் நவீன் ஜிண்டால் அரசியலில் தீவிரமானார். காங்கிரஸ் கட்சி சார்பில் 2004 மற்றும் 2009-ம் ஆண்டுகளில் குருக்ஷேத்ரா மக்களவைத் தொகுதியில் காங்கிரஸ் சார்பில் வெற்றி பெற்றார். ஆனால் 2014 பொதுத்தேர்தலில், பாஜகவின் ராஜ்குமார் சைனி வசம் தோல்வியுற்றார். அதன் பிறகு வந்த 2019 தேர்தலில் நவீன் ஜிண்டால் போட்டியிடவில்லை.

தற்போது தேர்தல் நெருக்கத்தில் காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகி பாஜகவில் நேற்று இணைந்தார். தாவல் மேற்கொண்ட அடுத்த சில மணி நேரங்களில், பாஜகவின் குருஷேத்ரா வேட்பாளராக நவீன் ஜிண்டால் அறிவிக்கப்பட்டார்.

காங்கிரஸ் விலகலை உறுதிப்படுத்திய நவீன் ஜிண்டால், “நான் 10 ஆண்டுகளாக குருஷேத்ரா எம்பியாக சேவையாற்றினேன். இதற்காக காங்கிரஸ் தலைமைக்கும், அப்போதைய பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங்குக்கும் நன்றி. இன்று, நான் காங்கிரஸ் கட்சியின் முதன்மை உறுப்பினர் பதவியில் இருந்து ராஜினாமா செய்கிறேன்” என்று பொதுவெளியில் அறிவிப்பு வெளியிட்டார்.

பாஜக பொதுச் செயலாளர் வினோத் தாவ்டே முன்னிலையில், டெல்லியில் நடைபெற்ற கட்சி நிகழ்வில் அவர் பாஜகவில் நேற்று இணைந்தார். இதனைத் தொடர்ந்தே நவீன் ஜிண்டால் தாயார் சாவித்திரி ஜிண்டாலும் தனது கட்சித் தாவலை இன்று உறுதிப்படுத்தினார்.

84 வயதான சாவித்திரி ஜிண்டால் வெளியிட்ட பதிவில், "நான் 10 ஆண்டுகள் எம்எல்ஏ-வாக ஹிசார் தொகுதி மக்களுக்காக உழைத்தேன்.மேலும் அமைச்சராகவும் ஹரியானா மாநிலத்திற்கு தன்னலமின்றி சேவை செய்துள்ளேன். தற்போது எனது குடும்பத்தினரின் ஆலோசனையின் பேரில், காங்கிரஸின் முதன்மை உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்கிறேன்" என்று தெரிவித்துள்ளார். ஜிண்டால் குடும்பத்தின் மிச்சமுள்ள அரசியல் பிரபலமான அவரது மகள் சீமா ஜிண்டாலும் பாஜகவில் இணைந்துள்ளார். கட்சியின் பாரம்பரிய குடும்பம் அடியோடு பாஜகவுக்கு தாவியபோதும், காங்கிரஸ் கனத்த மவுனம் வாசிக்கிறது.

இதையும் வாசிக்கலாமே...  

அதிர்ச்சி... போதையில் விமானம் ஓட்டும் பைலட்கள்... 6 மாதங்களில் 33 பைலட்கள் உட்பட130 பேருக்கு தண்டனை!

கூட்டமும் சேரவில்லை; கூட்டணியிலும் ஒற்றுமையில்லை... தேர்தல் பிரச்சாரத்தை பாதியில் நிறுத்திய ராதிகா!

இப்படியெல்லாமா விளையாடுறது?... குடல் வெடித்து வாலிபர் சாவு!

இப்படி ஆயிடுச்சே.. ராமநாதபுரத்தில் சுயேட்சையாக போட்டியிடும் ஓபிஎஸ்... 5 ஓபிஎஸ்-களின் வேட்பு மனுக்கள் ஏற்பு!

’பப்’பில் நைட் பார்ட்டி... ஸ்ருதிஹாசனுடன் செம ரொமான்ஸில் லோகேஷ்?! கதறும் கோலிவுட்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in