தொண்டர்கள் அதிர்ச்சி... வேட்புமனுவை வாபஸ் பெற்றார் முன்னாள் எம்.பி., ராமசுப்பு... நெல்லையில் அதிருப்தி!

முன்னாள் எம்பி ராமசுப்பு
முன்னாள் எம்பி ராமசுப்பு

திருநெல்வேலி மக்களவைத் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் ராபர்ட் ப்ரூஸ்க்கு போட்டியாக முன்னாள் காங்கிரஸ் எம்.பி ராமசுப்பு வேட்புமனு தாக்கல் செய்திருந்த நிலையில், இன்று தனது வேட்புமனுவை வாபஸ் பெற்றார்.

தமிழகத்தில் திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள காங்கிரஸ், தமிழகத்தில் 9 தொகுதிகள், புதுச்சேரியில் ஒரு தொகுதியில் போட்டியிடுகிறது. புதுச்சேரியில் வைத்தியலிங்கம், தமிழகத்தில் திருவள்ளூரில் சசிகாந்த் செந்தில், கிருஷ்ணகிரியில் கோபிநாத், கரூரில் ஜோதிமணி, கடலூரில் எம்.கே.விஷ்னு பிரசாத், சிவகங்கையில் கார்த்தி சிதம்பரம், விருதுநகரில் மாணிக்கம் தாகூர், மயிலாடுதுறையில் ஆர்.சுதா, கன்னியாகுமரியில் விஜய் வசந்த், நெல்லையில் ராபர்ட் ப்ரூஸ் போட்டியிடுகின்றனர்.

ராபர்ட் ப்ரூஸ்
ராபர்ட் ப்ரூஸ்

இந்நிலையில் வேட்புமனுதாக்கல் செய்வதற்கான கடைசி நாளான நேற்று, நெல்லை தொகுதி வேட்பாளர் ராபர்ட் ப்ரூஸ் வேட்புமனுதாக்கல் செய்தார். அவருக்கு போட்டியாக, தமிழக காங்கிரஸ் கமிட்டி பொதுச்செயலாளர் வானமாமலை மற்றும், நெல்லை மக்களவைத் தொகுதியின் முன்னாள் எம்.பி ராமசுப்பு ஆகியோர் நேற்று திடீரென வேட்புமனுதாக்கல் செய்ய ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இவர்களில் முன்னாள் எம்பி ராமசுப்புவின் வேட்புமனு மட்டும் ஏற்கப்பட்டது. டோக்கனில் குறிப்பிட்ட நேரம் கடந்து வந்ததால், வானமாமலையின் வேட்புமனு ஏற்கப்படவில்லை.

முன்னாள் எம்பி ராமசுப்பு நேற்று வேட்புமனு தாக்கல் செய்தார்.
முன்னாள் எம்பி ராமசுப்பு நேற்று வேட்புமனு தாக்கல் செய்தார்.

காங்கிரஸ் வேட்பாளர் ராபர்ட் ப்ரூஸ்க்கு போட்டியாக, அக்கட்சியை சேர்ந்த முன்னாள் எம்பி ராமசுப்பு வேட்புமனு தாக்கல் செய்தது, அக்கட்சிக்குள் சலசலப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில், வேட்புமனுவை இன்று காலை வாபஸ் பெற்ற ராமசுப்பு, வேட்பாளர் தேர்வில் தனது ஆதங்கத்தை கட்சி மேலிடத்திற்கு தெரியப்படுத்தவே வேட்புமனு தாக்கல் செய்ததாக பத்திரிக்கையாளர்களிடம் கூறினார்.

இதையும் வாசிக்கலாமே...  

அதிர்ச்சி... போதையில் விமானம் ஓட்டும் பைலட்கள்... 6 மாதங்களில் 33 பைலட்கள் உட்பட130 பேருக்கு தண்டனை!

கூட்டமும் சேரவில்லை; கூட்டணியிலும் ஒற்றுமையில்லை... தேர்தல் பிரச்சாரத்தை பாதியில் நிறுத்திய ராதிகா!

இப்படியெல்லாமா விளையாடுறது?... குடல் வெடித்து வாலிபர் சாவு!

இப்படி ஆயிடுச்சே.. ராமநாதபுரத்தில் சுயேட்சையாக போட்டியிடும் ஓபிஎஸ்... 5 ஓபிஎஸ்-களின் வேட்பு மனுக்கள் ஏற்பு!

’பப்’பில் நைட் பார்ட்டி... ஸ்ருதிஹாசனுடன் செம ரொமான்ஸில் லோகேஷ்?! கதறும் கோலிவுட்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in