தீர்ப்பு எதிரொலி! அதிமுக கொடி இல்லாமல் காரில் வலம் வரும் ஓபிஎஸ்!

தீர்ப்பு எதிரொலி! அதிமுக கொடி இல்லாமல் காரில் வலம் வரும் ஓபிஎஸ்!

சென்னை உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பையடுத்து அதிமுகவின் கொடியை தனது காரில் பயன்படுத்தாமல் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வலம் வருகிறார்.

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வழக்கு தொடர்ந்த நிலையில், அ.தி.மு.க.வின் கொடி, பெயர், இரட்டை இலை சின்னம் ஆகியவற்றை பயன்படுத்தக் கூடாது என்று முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்திற்கு சென்னை உயர் நீதிமன்றம் இடைக்கால உத்தரவை பிறப்பித்திருக்கிறது. இந்த நிலையில் கடந்த ஒரு வார காலமாக சிங்கப்பூருக்கு சென்றிருந்த, ஓ. பன்னீர்செல்வம் நேற்று இரவு சிங்கப்பூரில் இருந்து விமானம் மூலம் சென்னை திரும்பினார்.

அவருக்கு சென்னை விமான நிலையத்தில் அவரது ஆதரவாளர்கள், அ.தி.மு.க. கொடி இல்லாமல் வரவேற்பளித்தனர். அதன் பின்பு வழக்கமாக ஓ.பன்னீர்செல்வம் பயன்படுத்தும் காரில் அ.தி.மு.க.வின் கட்சி கொடி இல்லாமல், சென்னை விமான நிலையத்திலிருந்து, கிரீன்வேஸ் சாலையில் உள்ள தனது இல்லத்துக்கு அவர் புறப்பட்டு சென்றார். இதையடுத்து ஓ.பன்னீர்செல்வம் தன் ஆதரவாளர்களுடன் சென்னையில் கலந்து ஆலோசிக்கிறார்.

அதோடு நாளை உயர் நீதிமன்ற தனி நீதிபதி வழங்கிய தீர்ப்பை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு இரண்டு நீதிபதிகள் கொண்ட அமர்வு முன்பு விசாரணைக்கு வர உள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in