ஆச்சரியம்! சகோதரனின் குழந்தையை பெற்றெடுத்த பெண்!

சப்ரினா
சப்ரினா

அமெரிக்காவில் பெண் ஒருவர்,   தனது சொந்த  சகோதரனின் மகனை வயிற்றில் சுமந்து பெற்றெடுத்துள்ள சம்பவம் அரங்கேறி உள்ளது. 

அமெரிக்காவின் கலிபோர்னியாவை சேர்ந்தவர் சப்ரினா. 30 வயதாகும் இவர் சொத்து விவகாரங்களை கவனிக்கும் நிறுவனத்தில் மேலாளராக உள்ளார். இவர் தனது  சகோதரர் ஷான் பெட்ரியின் ஆண் குழந்தையை தன் வயிற்றில் சுமந்து பெற்றெடுத்துள்ளார். 

அதாவது  ஷான் பெட்ரி ஓரின சேர்க்கையாளராக இருந்து வருகிறார். அவர் பால் என்ற ஆணை திருமணம் முடித்து வாழ்ந்து வருகிறார். அவர்களால் ஒரு குழந்தையை பெற்றெடுக்க இயலாது என்பதால் அதற்காக தனது சகோதரி உதவியை அவர் நாடியுள்ளார்.  அதன் காரணமாக ஷான் பெட்ரியின் குழந்தையை சப்ரினா தனது வயிற்றில் வளர்த்து பெற்றெடுத்துள்ளார்.

குழந்தை
குழந்தை

இதற்காக முறைப்படியான மருத்துவமனையை அணுகி  ஷான் பெட்ரியின் விந்தணுவை சரோகேசி (Surrogacy) முறையை பயன்படுத்தி  சப்ரினாவின் கருப்பைக்குள் வைத்திருக்கின்றனர். கரு நன்கு வளரத் தொடங்கி குழந்தையாக உருப்பெற்றுள்ளது.  பத்து மாதம் சுமந்து அழகான ஆண் குழந்தையை சப்ரினா பெற்றெடுத்துள்ளார். உயிரியல் ரீதியில் இது ஷான் பெட்ரியின் குழந்தையாக அமைந்துள்ளது.  

குழந்தை பிறந்து ஐந்து மாதங்களுக்கு மேல் ஆன நிலையில் தற்போது தான் தாய் மற்றும் சேயின் படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளனர். ஒரு தாயாக அல்லாமல் அத்தையாக இந்த குழந்தையை தான் மிகவும் நேசிப்பதாக சப்ரினா கூறியுள்ளார். இன்னும் தனது சகோதரனின் குழந்தைகளை பெற்றெடுக்க விரும்புவதாகவும் அவர் கூறியுள்ளார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in