இன்று முதல் 3 நாட்களுக்கு மெட்ரோ ரயில் சேவை நீட்டிப்பு!

சென்னை மெட்ரோ ரயில் சேவை
சென்னை மெட்ரோ ரயில் சேவை

இன்று நவம்பர் 9ம் தேதி முதல் நவம்பர் 11ம் தேதி சனிக்கிழமை வரை தீபாவளியை முன்னிட்டு பொதுமக்கள் வசதிக்காக சென்னையில் கூடுதல் மெட்ரோ ரயில் சேவை இயக்கப்பட உள்ளது.

தீபாவளி பண்டிகையை சொந்தபந்தங்களோடு கொண்டாட, ஊருக்கு கிளம்ப தயாராகி வரும் மக்கள், தீபாவளி ஷாப்பிங்கில் முழு மூச்சுடன் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், மெட்ரோ ரயில் சேவை நீட்டிப்பு பொதுமக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

இது தொடர்பாக மெட்ரோ ரயில் நிர்வாகம் வெளியிட்டிருந்த செய்திக் குறிப்பில், ”தீபாவளி தொடர் விடுமுறையை முன்னிட்டு சொந்த ஊருக்கு செல்லும் மெட்ரோ ரயில் பயணிகளின் வசதிக்காக மாலை நெரிசல்மிகு நேரத்தில் இயக்கப்பட்டு வரும் மெட்ரோ ரயில் சேவை, 9.11.2023 (வியாழக்கிழமை), 10.11.2023 (வெள்ளிக்கிழமை) மற்றும் 11.11.2023 (சனிக்கிழமை) ஆகிய நாட்களில் இரவு 10 மணி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மெட்ரோ சேவை நீட்டிப்பு
மெட்ரோ சேவை நீட்டிப்பு

நீட்டிக்கப்பட்ட நெரிசல்மிகு நேரங்களில், இரவு 8 மணி முதல் 10 மணி வரை மெட்ரோ ரயில் சேவைகள் இரண்டு வழித்தடங்களிலும் 9 நிமிட இடைவெளிக்கு பதிலாக 6 நிமிட இடைவெளியில் இயக்கப்படும். போக்குவரத்து நெரிசல் மற்றும் சிரமம் இல்லாத பயணத்தை மேற்கொள்ள பயணிகள் மெட்ரோ ரயில் சேவையை பயன்படுத்திக்கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

தீபாவளி பண்டிகை ஒட்டி 9,10,11 தேதிகளில் சேவை நீட்டிப்பு
தீபாவளி பண்டிகை ஒட்டி 9,10,11 தேதிகளில் சேவை நீட்டிப்பு

இந்த மெட்ரோ ரயில் நீட்டிப்பு சேவை 09.11.2023 (வியாழக்கிழமை). 10.11.2023 (வெள்ளிக்கிழமை) மற்றும் 11.11.2023 (சனிக்கிழமை) ஆகிய மூன்று நாட்களுக்கு மட்டுமேஎன தெரிவிக்கப்பட்டுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in