கனமழை எதிரொலி... 6 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை!

கனமழை எதிரொலி... 6 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை!

தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கடந்த இரு தினங்களாகவே கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில், மதுரை, திண்டுக்கல், கோவை, தேனி, திருப்பூர், நாமக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு கனமழை காரணமாக விடுமுறை அளித்து அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர்.

மழை
மழை

குமரிக்கடல் பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் மதுரை, கோவை, திண்டுக்கல், தேனி, திருப்பூர் மற்றும் நீலகிரியில் 4 தாலுகாக்களில் மட்டும் (உதகை, குன்னூர், கோத்தகிரி, குந்தா) ஆகிய 6 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in