விஜய் கட்சியில் இணைகிறாரா ஓபிஎஸ் மகன்... திடீர் ஸ்டேட்மென்ட்டால் பரபரப்பு!

ரவீந்திரநாத்
ரவீந்திரநாத்

நடிகர் விஜயுடன்  இணைந்து பணியாற்றத் தயாராக இருப்பதாக  தேனி மக்களவை  உறுப்பினரும் ஓபிஎஸ் மகனுமான ஓ.பி. ரவீந்திரநாத் குமார் தெரிவித்துள்ளார்.

நடிகர் விஜய்
நடிகர் விஜய்

அதிமுக முன்னாள் ஒருங்கிணைப்பாளரும்,  முன்னாள் முதல்வருமான ஓபிஎஸ்சின் மகன் ஓ.பி.ரவீந்திரநாத் குமார். இவர் கடந்த 2019 மக்களவைத் தேர்தலில் தேனி தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அந்தத் தேர்தலில் அதிமுக, பாஜக, பாமக, தேமுதிக உள்ளிட்ட கட்சிகள் கூட்டணி அமைத்து போட்டியிட்டன.  போட்டியிட்ட அனைத்து தொகுதிகளிலும் இந்தக் கூட்டணி தோல்வியை தழுவிய நிலையில் ரவீந்திரநாத் மட்டுமே வெற்றி பெற்றார்.

அதன் பிறகு அதிமுகவில் ஏற்பட்ட உட்கட்சி மோதல் காரணமாக ஓபிஎஸ் கட்சியிலிருந்து நீக்கப்பட்டார். அதனால் அதிமுக உறுப்பினராக இருந்தாலும் எதிலும் ஒட்டாமல் ரவீந்திரநாத் இருந்து வந்தார். இந்தத் தேர்தலில் அவர் மீண்டும் தேனி மக்களவைத் தேர்தலில் போட்டியிடுவார் என்று எதிர்பார்க்கப் பட்டது. ஆனால்  பாஜக கூட்டணியில் ஓபிஎஸ்சுக்கு ஒரே ஒரு சீட்  மட்டுமே வழங்கப்பட்டது. அதிலும் தேனி தொகுதி வழங்கப் படவில்லை. அதனால் ரவீந்திரநாத் போட்டியிடவில்லை.

ஓபிஎஸ்
ஓபிஎஸ்

கட்சியும் கைவிட்டுப்போய்விட்ட நிலையில், சீட்டும் கிடைக்காததால்  ரவீந்திரநாத் அதிருப்தியில் உள்ளதாக சொல்லப்படுகிறது. இந்த நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தனது தந்தையை விட்டுக் கொடுக்காமல் பேசினார். ராமநாதபுரத்தில் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் தனது தந்தையும், தேனியில் மிகப்பெரிய வெற்றியை தினகரனும் பெறுவார்கள் என்று தெரிவித்தார்.

நடிகர்  விஜயின் அரசியல் கட்சி குறித்து அவரிடம் கேட்டபோது, "தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் தமிழ்நாட்டு மக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை செய்து வருகிறார். அடுத்த கட்டமாக அரசியல் கட்சி ஆரம்பித்திருக்கிறார். ஜனநாயக நாட்டில் யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம்.  அதேசமயத்தில் அவர் மக்களுக்காக நல்ல திட்டங்களை வகுத்து  செயல்படுத்தினால் அவரோடு இணைந்து பணியாற்ற தயாராக இருக்கிறோம்"  என ரவீந்திரநாத் தெரிவித்தார்.

அதிமுக மீண்டும் ஒன்றுபட்டாலும்கூட ரவீந்திரநாத்துக்கு கட்சிக்குள் பழைய முக்கியத்துவம் கிடைக்கும் என்பதைச் சொல்ல முடியாது. அதேசமயம், ஓபிஎஸ்சின் நிலையற்ற அரசியலை நம்பிக்கொண்டு இருந்தாலும் ரவீந்திரநாத்தின் அரசியல் எதிர்காலம் கேள்விக்குறியாகிவிடும்.

அதனால் தான் அடுத்தகட்ட அரசியல் நகர்வுக்கு ரவீந்திரநாத் தயாராகிவிட்டதாகச் சொல்லும் அவரது ஆதரவாளர்கள், “விஜயுடன் இணைந்து பணியாற்றுவதற்கு ரவீந்திரநாத் ஒன்றும் தனிக்கட்சி நடத்தவில்லையே. அப்படி இருக்கையில் இப்படியொரு கருத்தை இந்த நேரத்தில் அவர் தெரிவித்திருக் கிறார். அப்படியானால் விஜய் கட்சியில் சேர தயாராக இருக்கிறேன் என்பதைத்தான் அவர் இப்படி மறைமுகமாகச் சொல்லி இருக்கிறார்” என்கிறார்கள்.

இதையும் வாசிக்கலாமே...  


இன்று பரிசீலனை.. தமிழகத்தில் 39 தொகுதிகளில் 1,403 பேர் வேட்புமனு தாக்கல்!

கை சின்னத்துக்கு வாக்களியுங்கள்; பழசை மறக்காத ஜி.கே.வாசன்... பம்பரத்துக்கு ஓட்டு கேட்ட சி.வி.சண்முகம்!

முதல்ல எல்லா பூத்களுக்கும் ஏஜென்ட் போடமுடியுதானு பாருங்க?... பாஜகவை பங்கம் செய்த வேலுமணி!

அக்காவை தோற்கடித்து, தம்பியை வெற்றி பெற வைக்க வேண்டும்... அமைச்சர் பன்னீர்செல்வத்துக்கு இப்படி ஒரு வேலை!

தேறுவாரா திருமா... சிதம்பரம் தொகுதி நிலவரம்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in