மதிமுகவுக்கு 1 தொகுதி; ஒரு ராஜ்யசபா எம்பி... ஸ்டாலின் முடிவால் வைகோ மகிழ்ச்சி!

வைகோ
வைகோ

தமிழகத்தில் எதிர்வரும் மக்களவைத் தேர்தலில் 40 தொகுதிகளிலும் திமுக கூட்டணி வெற்றி பெறும் என மதிமுக அவசர செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப் பட்டுள்ளது.

ஸ்டாலினுடன் வைகோ
ஸ்டாலினுடன் வைகோ

திமுகவுடன் தொகுதிப் பங்கீட்டில் இழுபறி ஏற்பட்டுள்ள நிலையில், மதிமுகவின் அவசர செயற்குழுக் கூட்டம்  கட்சியின் பொதுச் செயலாளர் வைகோ தலைமையில் இன்று நடைபெற்றது. கடந்த மக்களவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் மதிமுகவுக்கு ஒரு மக்களவைத் தொகுதியும், ஒரு மாநிலங்களவை சீட்டும் ஒதுக்கப்பட்டது. 

இந்தத் தோ்தலில் அதைவிட அதிக எண்ணிக்கையில் மதிமுக தொகுதிகளை எதிர்பார்த்த நிலையில் ஒரே ஒரு மக்களவைத் தொகுதியை மட்டுமே வழங்க திமுக முன் வந்தது. மாநிலங்களவை சீட் குறித்து பின்னால் பேசிக்கொள்ளலாம் என்று  திமுக கூறியதால்  அது தொடா்பான பேச்சுவாா்த்தையில் இழுபறி நீடித்து வந்தது. எனவே, அதுகுறித்து ஆலோசனை நடத்த இன்று அவசர செயற்குழுக் கூட்டத்தை வைகோ கூட்டியிருந்தார்.

மிகுந்த எதிர்பார்ப்புடன் நடந்த இந்த ஆலோசனைக் கூட்டத்தில் திமுக கூட்டணியில் தொடர்வது என்று ஒருமனதாக முடிவெடுக்கப்பட்டது. எதிர்வரும் தேர்தலில் திமுக வழங்கும் இடத்தில் பம்பரம் சின்னத்திலோ அல்லது தனிச் சின்னத்திலோ போட்டியிட இக்கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.  மத்தியில் ஆளும் பாஜக அரசை அகற்ற இந்தியா கூட்டணி இந்த தேர்தலை கவனமாக எதிர்கொள்கிறது என்று தீர்மானம் இயற்றப்பட்ட நிலையில், திமுக கூட்டணி தமிழகம் புதுச்சேரி உள்ளிட்ட  40 தொகுதிகளிலும் வெற்றி பெறும் எனவும்  தீர்மானம் இயற்றப்பட்டது.

மதிமுகவுக்கு கூடுதல் சீட் வழங்குவதில் திமுக கறார் காட்டி வரும் நிலையில் மதிமுக அவசர செயற்குழு கூட்டத்தை கூட்டியதால் அக்கட்சி என்ன முடிவு எடுக்குமோ என்ற எதிர்பார்ப்பு நிலவி வந்தது. இந்த நிலையில் திமுக கூட்டணியில் தொடரும் நிலைப்பாட்டை மதிமுக எடுத்திருப்பதால் அதிமுக கூட்டணிக்கு அக்கட்சி செல்லுமோ என்ற யூகங்கள் அடங்கிப் போயுள்ளது.

வைகோ
வைகோ

கடைசியாக வந்த தகவல்படி, ஒரு மக்களவைத் தொகுதி மற்றும் ஒரு மாநிலங்களவை சீட் வழங்க திமுக முன் வந்திருப்பதாகவும், அதனை ஏற்றுக்கொள்ள மதிமுக முடிவு செய்திருப்பதாகவும் தெரிகிறது.

இதனிடையே, திமுக தொகுதி பங்கீட்டு குழுவுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று காலை ஆலோசனை நடத்தினார். அதில் மதிமுக கேட்கும் ஒரு மக்களவை தொகுதியையும் மாநிலங்களவை சீட்டும் வழங்கலாம் என முதல்வர் கூறியதாகத் தெரிகிறது. இந்தத் தகவல் உடனடியாக வைகோவுக்கு தெரியப்படுத்தப்பட்டதாலேயே திமுக கூட்டணியில் தொடரும் நிலைப்பாட்டை அறிவித்தார் என்று சொல்லப்படுகிறது.

அடுத்த ஆண்டு காலியாகும் மாநிலங்களவை உறுப்பினர்  பதவிக்கு மீண்டும் வைகோ நிறுத்தப்படுவார் என பேச்சுவார்த்தையில் முடிவு செய்யப்பட்டிருப்பதாக தெரிகிறது.

இதையும் வாசிக்கலாமே...

ரயில்வே துறையில் கொட்டிக்கிடக்கும் வேலைவாய்ப்பு... 9,000 பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்!

ராணுவக் கல்லூரியில் படிக்க விருப்பமா?... மாணவர்கள் ஏப்.15 வரை விண்ணப்பிக்கலாம்!

பள்ளியில் பாடம் நடத்தும் ரோபோ ஆசிரியை... அசத்தும் ஏ.ஐ தொழில்நுட்பம்!

ராமேஸ்வரம் கஃபே வழக்கில் பரபரப்பு... குண்டு வைத்தவர் ஐஎஸ்ஐஎஸ் இயக்கத்தைச் சேர்ந்தவர்?

அண்ணாமலையை பதவியில் இருந்து தூக்கத் தயார்... டீல் பேசிய பாஜக: புறக்கணித்த எடப்பாடி பழனிசாமி!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in