ரயில்வே துறையில் கொட்டிக்கிடக்கும் வேலைவாய்ப்பு... 9,000 பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்!

ரயில்வேயில் வேலைவாய்ப்பு
ரயில்வேயில் வேலைவாய்ப்பு
Updated on
1 min read

இந்திய ரயில்வேயில் 9,000 காலிப்பணியிடங்கள் நிரப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு மார்ச் 9-ம் தேதி விண்ணப்பிக்கலாம் என்று நிரப்ப ரயில்வே பணியாளர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.

ரயில்வே பணியாளர் தேர்வு வாரியம்
ரயில்வே பணியாளர் தேர்வு வாரியம்

இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை நிறுவனமான ரயில்வேயில் தொழில்நுட்ப பிரிவில் உள்ள காலிப்பணிடங்களை நிரப்ப ரயில்வே பணியாளர் தேர்வு வாரியம் (ஆர்ஆர்பி) அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதற்கு மார்ச் 9-ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என்றும் அறிவித்துள்ளது.

இந்திய ரயில்வே துறைல் அசிஸ்டெண்ட் லோகோ பைலட் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மேலும், புதிதாக 9,000 பணியிடங்களை வரை நிரப்பப்பட உள்ளதாகவும், அது தொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் கூறப்பட்டுள்ளது.

டெக்னிக்கல் கிரேட்1 (சிக்னல்), டெக்னிக்கல் கிரேட் 111-ல் பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதற்கான கல்வித்தொடர்பான விவரங்களுக்கு வெளியாகும் அப்டேட்டுகளைக் காணலாம். விண்ணப்பதாரர்களுக்கு 18 வயது பூர்த்தியடைந்தவராகவும், 36 வயதுக்கு மிகாமலும் இருக்க வேண்டும்.

இதற்கான சம்பளம் டெக்னிக்கல் கிரேட்1-க்கு (சிக்னல்) ரூ.29,200 , டெக்னிக்கல் கிரேட் 111-க்கு 19,900 என்று கூறப்பட்டுள்ளது. ரயில்வே வாரியத்தின் இப்பணிக்கு தேர்ந்தெடுக்கப்படும் நபர்களின் சான்றிதழ் சரிபார்ப்பு முடிந்தவுடன் கணினி அடிப்படையிலான தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவார்கள். இதற்கு https://www.rrbchennai.gov.in/ என்ற இணைப்பை க்ளிக் செய்து விண்ணப்பிக்கலாம்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in