பள்ளியில் பாடம் நடத்தும் ரோபோ ஆசிரியை... அசத்தும் ஏ.ஐ தொழில்நுட்பம்!

மாணவனை வரவேற்கும் ரோபோ ஆசிரியை
மாணவனை வரவேற்கும் ரோபோ ஆசிரியை

இந்தியாவில் முதல் முறையாக ஏ.ஐ எனப்படும்  செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்ட ஆசிரியை கேரளாவில் உள்ள ஒரு பள்ளியில் கற்பித்தல் பணிக்காக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

பாடம் நடத்தும் ரோபோ ஆசிரியை
பாடம் நடத்தும் ரோபோ ஆசிரியை

உலகம் முழுவதும் தற்போது செயற்கை நுண்ணறிவு எனும் ஏ.ஐ தொழில்நுட்பம் வேகமாக வளர்ந்து வருகிறது. இந்த தொழில்நுட்பம் மூலம் மனிதர்கள் செய்யும் பணிகளைச் செய்ய வைக்க முடிகிறது. ஏ.ஐ தொழில்நுட்பத்தில் உருவாக்கப்படும் ரோபோக்கள் மனிதர்களை போல சிந்திக்கவும், பகுப்பாய்வு செய்யவும் முடிகிறது.

சமீபத்தில் தனியார் செய்திச் சேனல் ஒன்று ஏ.ஐ தொழில்நுட்பத்தில் உருவான செய்தி வாசிப்பாளரை அறிமுகம் செய்தது. அந்த வகையில் தற்போது ஏ.ஐ தொழில்நுட்பத்தில் ஒரு ஒரு ஆசிரியை உருவாக்கப்பட்டுள்ளார்.  'ஐரிஸ்' (IRIS) என பெயரிடப்பட்டுள்ள இந்த  ரோபோ ஆசிரியை கேரளா மாநிலம் திருவனந்தபுரத்தில் உள்ள கேடிசிடி உயர்நிலை பள்ளியில் கற்பித்தல் பணிக்காக அமர்த்தப்பட்டுள்ளது.  

ரோபோ வகையில் வடிவமைக்கப்பட்ட இந்த ஆசிரியை பள்ளி மாணவர்களுக்கு பாடம் சொல்லி கொடுப்பதோடு மாணவர்களின் சந்தேகங்களையும் தீர்த்து வைக்கிறது. அதோடு மாணவர்களுடன் கைகொடுத்து உண்மையான ஆசிரியர் போன்று செயல்பட்டு வருகிறது. இந்த புதிய முயற்சியை பள்ளியின் கடுவாயில் தங்கல் அறக்கட்டளை, மேக்கர்லாப்ஸ் எடுடெக் பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனத்துடன் சேர்ந்து உருவாக்கி உள்ளது. 

இந்த ரோபாவின் காலுக்கு அடியில் சக்கரங்கள் பொருத்தப்பட்டுள்ளதால் இது அங்கும், இங்கும் நகர்ந்து சென்று  பணியாற்றி வருகிறது.  இந்த ரோபா ஆசிரியையால் 3 மொழிகளில் பேசவும், மாணவர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கவும் முடியும். மேலும் இன்டெல் ப்ராசசெர் மற்றும் கோப்ராசசர் பொருத்தப்பட்டுள்ளதால் இது மாணவர்களின் அதிவேக கற்றலுக்கு உதவியாக இருக்கும் என நம்பப்படுகிறது. இந்தியாவின் முதல் ஏ.ஐ ஆசிரியர் ரோபோ என்ற பெருமையையும் இது பெற்றுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in