ராமேஸ்வரம் கஃபே வழக்கில் பரபரப்பு... குண்டு வைத்தவர் ஐஎஸ்ஐஎஸ் இயக்கத்தைச் சேர்ந்தவர்?

குண்டு வைத்த குற்றவாளி
குண்டு வைத்த குற்றவாளி
Updated on
1 min read

பெங்களூருவில் ராமேஸ்வரம் கஃபே குண்டு வெடிப்பு வழக்கில் தொடர்புடையவர் ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடையவர் என்று என்ஐஏ விசாரணையில் தெரிய வந்துள்ளது.

ராமேஸ்வரம் கஃபே
ராமேஸ்வரம் கஃபே

கர்நாடகா மாநிலம், பெங்களூருவில் உள்ள ராமேஸ்வரம் கஃபே ஓட்டலில் கடந்த வாரம் வெடிகுண்டு வெடித்ததில் ஒரு பெண் உள்பட 10 பேர் படுகாயமடைந்தனர். இதையொட்டி அமைக்கப்பட்ட தனிப்படை மற்றும் என்ஐஏ விசாரணையில் 5 பேர் பிடிபட்டுள்ளனர். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், ராமேஸ்வரம் கஃபேயில் குண்டு வைத்தவர் பயங்கரவாத இயக்கத்தைச் சேர்ந்தவர் என்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்த பயங்கரவாதிக்கு ஐஎஸ்ஐஎஸ் மற்றும் இஸ்லாமிய பயங்கரவாத இயக்கங்களுடன் தொடர்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேலும், குண்டு வைத்தவர் கைரேகள் இதுவரை கிடைக்கவில்லை. சிசிடிவி இல்லாத இடங்களில் சுற்றித் திரிந்த அவர், ஓட்டலில் சிங்க் அருகே வெடிகுண்டு பையை வைத்திருந்தார். அவர் செல்போன் பயன்படுத்தாததுடன், பொது போக்குவரத்தைப் பயன்படுத்தியதால், நன்கு பயிற்சி பெற்றவர் என்றும், போதிய தகவல்களைச் சேகரித்து முன் திட்டத்துடன்குண்டு வெடிப்பை நிகழ்த்தியுள்ளார் என்றும் என்ஐஏ விசாரணையில் தெரிய வந்துள்ளது.

குண்டு வைத்த குற்றவாளி
குண்டு வைத்த குற்றவாளி

ராமேஸ்வரம் கஃபே ஓட்டலில் குண்டுவெடிப்புக்கு மர்ம நபர்கள் அம்மோனியம் நைட்ரேட் பவுடரை பயன்படுத்தியது விசாரணையில் உறுதி செய்யப்பட்டுள்ளது. அம்மோனியம் நைட்ரேட் பொது விற்பனைக்கு தடைசெய்யப்பட்டுள்ளது. இது பெரும்பாலும் குவாரிகளில் பாறைகளை வெடிக்கப் பயன்படுகிறது.

மங்களூரு மற்றும் ஷிமோகா சம்பவங்களில், குண்டுவெடிப்பின் போது கந்தக தூள் மற்றும் பொட்டாசியம் நைட்ரேட் பயன்படுத்தப்பட்டது. எனவே, கர்நாடகா மற்றும் வெளி மாநிலங்களில் அம்மோனியம் நைட்ரேட் சப்ளை செய்தவர்கள் குறித்து என்ஐஏ தீவிரமாக விசாரணை நடத்தி வருகிறது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in