ராணுவக் கல்லூரியில் படிக்க விருப்பமா?... மாணவர்கள் ஏப்.15 வரை விண்ணப்பிக்கலாம்!

டேராடூன் ராணுவக் கல்லூரி
டேராடூன் ராணுவக் கல்லூரி
Updated on
1 min read

டேராடூனில் உள்ள இந்திய ராணுவக் கல்லூரியில் 8-ம் வகுப்பில் சேர விருப்பமுள்ளவர்கள் ஏப்ரல் 15-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) தெரிவித்துள்ளது.

Siddhant Sharma

உத்தராகண்ட் மாநிலம் டேராடூனில் அமைந்துள்ள இந்திய ராணுவக் கல்லூரியில் 2025-ம் கல்வியாண்டு 8-ம் வகுப்பு மாணவர் சேர்க்கைக்கான நுழைவுத் தேர்வு ஜூன் 1-ம் தேதி நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தேர்வு நாட்டின் பல்வேறு மாநிலங்களிலும் நடைபெற உள்ளது. அந்த வகையில் தமிழ்நாட்டில் சென்னையில் நடைபெறுகிறது.  இதில் தேர்ச்சி பெறுபவர்களுக்கு அடுத்ததாக நேர்முகத் தேர்வு நடத்தப்படும்.

இதற்கான விண்ணப்பப் படிவம் மற்றும் மாதிரி வினாத்தாள் தொகுப்புகளை 'கமாண்டன்ட், ராஷ்ட்ரீய இந்திய ராணுவக் கல்லுாரி, டேராடூன், உத்தராகண்ட் - 248003' என்ற முகவரிக்கு விரைவுத் தபால் வழியே விண்ணப்பக் கடிதம், கேட்புக் காசோலை ஆகியவற்றை அனுப்பி பெற்றுக் கொள்ளலாம்.

இந்த விண்ணப்பங்களைப் பெறுவதற்கு பொதுப் பிரிவினர் ரூ.600-க்கும், எஸ்சி, எஸ்டி பிரிவினர் ரூ.555-க்கும் காசோலை எடுக்க வேண்டும். பட்டியலினத்தவர்கள் சாதிச் சான்றிதழ் நகலும் சேர்த்து அனுப்ப வேண்டும். அதேபோல், ராணுவக் கல்லூரியின் (www.rimc.gov.in) இணையதளம் வழியாகவும் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

அதன்பின் பூர்த்தி செய்த விண்ணப்பங்களை 'தேர்வுக் கட்டுப்பாட்டு அதிகாரி, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம், பூங்கா நகர், சென்னை' என்ற முகவரிக்கு ஏப்ரல் 15-ம் தேதிக்குள் அனுப்ப வேண்டும். கூடுதல் விவரங்களை www.rimc.gov.in என்ற இணையதள முகவரியில் அறியலாம் என்று டிஎன்பிஎஸ்சி  தெரிவித்துள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in