தைரியம் இருந்தால் என் வீட்டிற்கு அமலாக்கத்துறையை பாஜக அனுப்பட்டும்: ஜோதிமணி எம்.பி!

ஜோதிமணி எம்.பி
ஜோதிமணி எம்.பி

தைரியம் இருந்தால் என் வீட்டிற்கு அமலாக்கத்துறையை பாஜக அனுப்பட்டும் என காங்கிரஸ் கரூர் மக்களவைத் தொகுதி உறுப்பினர் ஜோதிமணி சவால் விடுத்துள்ளார்.

கரூர் மக்களவை தொகுதி காங்கிரஸ் உறுப்பினர் ஜோதிமணியின் தேர்தல் செலவுகளுக்கு கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவக்குமார் பணம் அளிப்பதாக தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை குற்றம்சாட்டியிருந்தார்.

இதுகுறித்து ஜோதிமணி எம்.பி கூறுகையில், " தைரியம் இருந்தால் என் வீட்டிற்கு அமலாக்கத்துறையை பாஜக அனுப்பட்டும். என் வீட்டிற்கு அமலாக்கத்துறை வந்தால் காட்டன் சேலைகளைத் தவிர வேறு எதுவும் கிடைக்காது. நான் அண்ணாமலை போல், தனிநபர் தாக்குதல் நடத்தும் தூய்மையற்ற அரசியல்வாதி அல்ல" என்றார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in