ஒற்றை ஆள்; ஓகோ பிரச்சாரம்... தேனியை கலக்கும் சுயேட்சை வேட்பாளர்!

தேனியில் ஒற்றை ஆளாக வாக்கு சேகரிக்கும் பாண்டிக் குமார்
தேனியில் ஒற்றை ஆளாக வாக்கு சேகரிக்கும் பாண்டிக் குமார்

தேனி மக்களவைத் தொகுதியில் பாண்டிக்குமார் என்பவர் கரும்பு விவசாயி சின்னத்தில் சுயேட்சையாகப் போட்டியிடுகிறார். அரசியல் கட்சி வேட்பாளர்கள் எல்லாம் ஆள், அம்பு, சேனையை திரட்டி பிரச்சாரத்தில் ஈடுபட்டு வரும் நிலையில் தன்னந்தனியாக தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.

தேனி தொகுதியில் திமுக, அதிமுக, அமமுக உள்ளிட்ட கட்சிகள் பலம் வாய்ந்த கூட்டணிகள் அமைத்து களத்தில் உள்ளன. இந்தியா கூட்டணி சார்பில் திமுக வேட்பாளர் தங்க தமிழ்ச்செல்வன், என்டிஏ கூட்டணி சார்பில் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், அதிமுக கூட்டணி சார்பில் நாராயணசாமி உள்ளிட்டோர் களத்தில் உள்ளனர். நாம் தமிழர் கட்சி சார்பில் மதன் போட்டியிடுகிறார். இங்கு களத்திலுள்ள 25 வேட்பாளர்களில் 18 பேர் சுயேட்சைகள் என்பது குறிப்பிடத்தக்கது.

தேனியில் ஒற்றை ஆளாக வாக்கு சேகரிக்கும் சுயேச்சை வேட்பாளர் பாண்டிக் குமார்
தேனியில் ஒற்றை ஆளாக வாக்கு சேகரிக்கும் சுயேச்சை வேட்பாளர் பாண்டிக் குமார்

சுயேட்சையாகப் போட்டியிடும் போடியைச் சார்ந்த பாண்டிக் குமாருக்கு நாம் தமிழர் கட்சிக்குக் கிடைக்காத கரும்பு விவசாயி சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது. அந்த சந்தோஷத்தில் தொகுதி முழுக்க ஒற்றை ஆளாக துணிச்சலுடன் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார் பாண்டிக்குமார்.

அரசியல் கட்சிகளின் வேட்பாளர்களுக்குப் பின்னால் தொண்டர்களின் அணிவகுப்பு இருக்கும். ஆனால், பாண்டிக்குமாருக்குப் பின்னால் அந்த அணிவகுப்பெல்லாம் இல்லை. அதற்காக அவர் கவலைப்படவும் இல்லை. தன்னந்தனி ஆளாக பிரச்சாரம் செய்து வரும் பாண்டிக்குமாரை தேனி தொகுதி மக்கள் வியந்து பார்க்கிறார்கள்.

கம்பம் பகுதியில் தனியொருவராய் வாக்கு சேகரித்த பாண்டி குமார்
கம்பம் பகுதியில் தனியொருவராய் வாக்கு சேகரித்த பாண்டி குமார்

தனக்கே வெற்றி கிடைக்கும் என்று தன்னம்பிக்கையுடன் பேசும் பாண்டிக்குமார், ”இந்தப் பகுதியில் சமூக சேவை செய்து வருகிறேன். சட்டக் கல்லூரி மாணவர் என்பதால் சட்ட ரீதியான பிரச்சினைகளில் பொதுமக்களுக்கு உறுதுணையாக நின்று சட்டங்கள் குறித்து அவர்களுக்கு எடுத்துரைப்பேன். நான் வெற்றி பெற்றால் இதே பகுதியில் தங்கியிருந்து உங்களுக்கு சேவை செய்வேன்” என்கிறார்.

நம்பிக்கை தானே வாழ்க்கை!

இதையும் வாசிக்கலாமே...   


முன்னாள் அமைச்சர் ஆர்.எம்.வீரப்பன் கவலைக்கிடம்... மருத்துவமனையில் அனுமதி!

பகீர்... துப்பாக்கியுடன் முதல்வர் அருகே சென்று, மாலை அணிவித்த நபரால் பரபரப்பு!

நடிகர் அஜித்தின் காஸ்ட்லி கிஃப்ட்... ஆச்சரியத்தில் வில்லன் நடிகர்!

தேர்தல் திருவிழா.. பணம், நகை, மது, சேலை, லேப்டாப்... ரூ.71 கோடி மதிப்புள்ள பொருட்கள் பறிமுதல்!

அமீருக்கு அடுத்தடுத்து சிக்கல்... நேரில் ஆஜராக மீண்டும் சம்மன்

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in