நடிகர் அஜித்தின் காஸ்ட்லி கிஃப்ட்... ஆச்சரியத்தில் வில்லன் நடிகர்!

அஜித், ஆரவ்
அஜித், ஆரவ்

’விடாமுயற்சி’ படத்தில் தன்னுடன் வில்லனாக நடிக்கும் ஆரவ்க்கு நடிகர் அஜித் காஸ்ட்லியான கார் ஒன்றைப் பரிசாக கொடுத்து இருக்கிறார். இந்த விஷயம் ரசிகர்கள் மத்தியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

மகிழ்திருமேனி இயக்கத்தில் நடிகர் அஜித் நடிப்பில் உருவாகும் திரைப்படம் ‘விடாமுயற்சி’. இந்தப் படத்தில் நடிகர் ஆரவ் அஜித்துக்கு வில்லனாக நடித்து வருகிறார். ’விடாமுயற்சி’ படத்தில் ஆரவ் இணைந்ததில் இருந்தே அஜித்துடன் நெருக்கம் காட்டி வருகிறார். அவருடன் இணைந்து பைக் டூர் செல்வது, பிரியாணி சமைத்துச் சாப்பிடுவது, வெளியில் செல்வது என அஜித்துடன் இருக்கும் புகைப்படங்களை அவ்வப்போது தன்னுடைய சமூகவலைதளங்களில் தவறாமல் பகிர்ந்து வருகிறார் ஆரவ்.

இவருக்குதான் நடிகர் அஜித் ரூ. 35 லட்சத்தில் புதிய கார் ஒன்றை பரிசளித்து அசத்தி இருக்கிறார். பைக் மற்றும் கார் ஓட்டுவதில் அதீத ஆர்வம் கொண்டவர் ஆரவ். இதனைப் புரிந்து கொண்ட அஜித், அவருக்கு கார் பரிசளித்து மகிழ்வித்து இருக்கிறார்.

அஜித்தின் ‘விடாமுயற்சி’ படக்காட்சி...
அஜித்தின் ‘விடாமுயற்சி’ படக்காட்சி...

சமீபத்தில் ‘விடாமுயற்சி’ படத்தில் இருந்து அஜித் மற்றும் ஆரவ் இருவருக்கும் இடையேயான கார் ஆக்சிடெண்ட் தொடர்பான படப்பிடிப்பு வீடியோ வெளியானது.

படத்தில் அனைவரும் கஷ்டப்பட்டு வேலை செய்து கொண்டிருக்கும் போது ’படம் டிராப் ஆகிவிட்டது’ என சமூகவலைதளங்களில் பரவும் வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கத்தான் இந்த வீடியோ வெளியிடப்பட்டது எனவும் விளக்கம் தரப்பட்டது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in