பகீர்... துப்பாக்கியுடன் முதல்வர் அருகே சென்று, மாலை அணிவித்த நபரால் பரபரப்பு!

முதல்வர் சித்தராமையா பிரச்சார வாகனத்தில் துப்பாக்கியுடன் ஏறிய நபர்
முதல்வர் சித்தராமையா பிரச்சார வாகனத்தில் துப்பாக்கியுடன் ஏறிய நபர்

கர்நாடகாவில் முதல்வர் சித்தராமையா பிரச்சாரத்தின் போது வாகனத்தில் இருந்த காங்கிரஸ் தலைவர்களுக்கு துப்பாக்கியுடன் மாலை அணிவித்த நபரால் பரபரப்பு ஏற்பட்டது.

கர்நாடகா மாநிலம் பெங்களூரு தெற்கு தொகுதியில் அம்மாநில போக்குவரத்து துறை அமைச்சர் ராமலிங்க ரெட்டியின் மகள் சவுமியா ரெட்டி காங்கிரஸ் சார்பில் போட்டியிடுகிறார். இவரக்கு ஆதரவாக தொகுதிக்கு உள்பட்ட பகுதியில் நேற்று அம்மாநில முதல்வர் சித்தராமையா வாகனத்தில் பிரச்சாரப் பேரணி சென்றார்.

அப்போது, வாகனத்தில் வந்த காங்கிரஸ் தலைவர்களுக்கு கீழே இருந்த தொண்டர்கள் மாலைகளை வழங்கினர். அவற்றை வாகனத்தின் முன்பகுதியில் நின்று கொண்டிருந்த ஒரு நபர் வாங்கி, முதல்வர் சித்தராமையா அருகில் இருந்த வேட்பாளர், தலைவர்களுக்கு அணிவித்தார்.

பெங்களூரு தெற்கு தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் சவுமியா ரெட்டி
பெங்களூரு தெற்கு தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் சவுமியா ரெட்டி

இந்நிலையில் மாலையை பெற்று அணிவித்த நபர் தனது இடுப்பில் துப்பாக்கியை சொருகியிருந்ததார். துப்பாக்கியை வெளிப்படையாக வைத்துக் கொண்டே காங்கிரஸ் தலைவர்களுக்கு அந்த நபர் மாலை அணிவித்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியது.

இந்நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக போலீஸார் விசாரித்ததில், “அந்த நபரின் பெயர் ரியாஸ் என்பதும், முன்னர் பல்வேறு சம்பவங்களில் இவர் தாக்கப்பட்டதைத் தொடர்ந்து காவல் துறை அனுமதியின் பேரில் பாதுகாப்புக்காக இவர் சொந்தமாக துப்பாக்கி வைத்துக் கொள்ள அனுமதி வழங்கப்பட்டிருந்ததும் தெரிய வந்தது.

முதல்வர் பிரச்சார வாகனத்தில் துப்பாக்கியுடன் ஏறிய நபரால் பரபரப்பு
முதல்வர் பிரச்சார வாகனத்தில் துப்பாக்கியுடன் ஏறிய நபரால் பரபரப்பு

மேலும், தேர்தலை முன்னிட்டு இவர் துப்பாக்கியை போலீஸாரிடமிருந்து ஒப்படைப்பதில் இருந்து விலக்கு பெற சிறப்பு அனுமதி பெற்றுள்ளதாகவும் போலீஸார் தெரிவித்தனர்.

இதற்கிடையே இந்த சம்பவம் குறித்து அம்மாநில பாஜகவினர் கூறுகையில், "சித்தராமையாவுக்கு மாலை அணிவிக்கும் நபர்கள் குண்டர்கள், ரவுடிகள் என்பதையே இது காட்டுகிறது" என விமர்சித்துள்ளனர்.

இதையும் வாசிக்கலாமே...   


மாம்பழமா, மைத்துனரா?: கடலூரில் கரையேறப் போவது யார்?

பரபரப்பு... மதுரையில் மு.க அழகிரியின் பண்ணை வீட்டில் கதவை உடைத்து கொள்ளை முயற்சி!

உத்தராகண்டில் சோகம்: பள்ளத்தாக்கில் வாகனம் கவிழ்ந்ததில் 8 பேர் பலி!

தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட அரசு ஊழியர்கள் 3 பேர் சஸ்பெண்ட்!

போதைப்பொருள் கடத்தல் வழக்கில் திடீர் பரபரப்பு... இயக்குநர் அமீர், ஜாபர் சாதிக் வீடுகளில் ஈ.டி ரெய்டு!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in