அமீருக்கு அடுத்தடுத்து சிக்கல்... நேரில் ஆஜராக மீண்டும் சம்மன் - போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிரடி!

அமீர்
அமீர்

இயக்குநர் அமீரை மீண்டும் விசாரணைக்கு ஆஜராகுமாறு டெல்லி போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் சம்மன் அனுப்பியுள்ளனர்.

சுமார் 2,000 கோடி ரூபாய் மதிப்பிலான போதைப் பொருளை வெளிநாடுகளுக்கு கடத்திய வழக்கில், நடத்தப்பட்ட விசாரணையின் அடிப்படையில் சென்னையை சேர்ந்த ஜாபர் சாதிக் கடந்த மாதம் 9ம் தேதி கைது செய்யப்பட்டார்.

இதனைத் தொடர்ந்து ஜாபர் சாதிக்குடன் தொடர்புடைய நபர்களிடமும் சோதனை நடத்தப்பட்டது. இதன்படி அமீர் கைதான ஜாபர் சாதிக்கின் நண்பர் என்பதும், இருவரும் இணைந்து காபி ஷாப் ஒன்றை தொடங்கியதாகவும் தகவல் வெளியாகின. இந்த நிலையில் அமீருக்கு போதைப் பொருள் கடத்தல் தடுப்பு பிரிவினர் சம்மன் அனுப்பி, ஏப்ரல் 2ம் தேதி அவரிடம் சுமார் 12 மணி நேரம் விசாரணை நடத்தினர்.

ஜாபர் சாதிக்
ஜாபர் சாதிக்

அவர்களின் நடவடிக்கை ஒரு பக்கம் இருக்க தற்போது அமலாக்கத் துறையினரும் இந்த விவகாரத்தில் தலையிட்டுள்ளனர். இன்று அதிகாலை சென்னையில் மயிலாப்பூரில் உள்ள ஜாபர் சாதிக்கின் வீடு மற்றும் அலுவலகம் உள்ளிட்ட இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். அதே நேரத்தில் திரைப்பட இயக்குநர் அமீர் வீடு அவரது அலுவலகம் உள்ளிட்ட இடங்களிலும், ஜாபர் சாதிக்கின் நண்பர் புகாரி என்பவர் தொடர்புடைய இடங்களிலும் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.

இயக்குநர் அமீர்
இயக்குநர் அமீர்

இந்த நிலையில் அமீருக்கு மீண்டும் போதைப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு சம்மன் அனுப்பியுள்ளது. அதில், 2020-2023 ஆம் ஆண்டு கால கட்டத்தில் சொத்து கணக்கு ஆவணங்களையும், அந்த 3 ஆண்டு கால வங்கிக் கணக்கு தகவல்களையும் எடுத்துக் கொண்டு நேரில் ஆஜராகுமாறு அறிவுறுத்தியுள்ளனர். அதே நேரத்தில் இதற்கு கால அவகாசம் கேட்டு அமீரும், டெல்லி என்சிபி அதிகாரிகளுக்கு கடிதம் எழுதியுள்ளார்.

இதையும் வாசிக்கலாமே...   

மாம்பழமா, மைத்துனரா?: கடலூரில் கரையேறப் போவது யார்?

பரபரப்பு... மதுரையில் மு.க அழகிரியின் பண்ணை வீட்டில் கதவை உடைத்து கொள்ளை முயற்சி!

உத்தராகண்டில் சோகம்: பள்ளத்தாக்கில் வாகனம் கவிழ்ந்ததில் 8 பேர் பலி!

தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட அரசு ஊழியர்கள் 3 பேர் சஸ்பெண்ட்!

போதைப்பொருள் கடத்தல் வழக்கில் திடீர் பரபரப்பு... இயக்குநர் அமீர், ஜாபர் சாதிக் வீடுகளில் ஈ.டி ரெய்டு!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in